MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்று பாமக மாநாடு.! போலீசார் விதித்த 10 கட்டுப்பாடுகள் என்ன.? மீறினால் அவ்வளவு தான்

இன்று பாமக மாநாடு.! போலீசார் விதித்த 10 கட்டுப்பாடுகள் என்ன.? மீறினால் அவ்வளவு தான்

மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழாவிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில், போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 11 2025, 07:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாமக மாநாடு   வன்னியர் கட்டுப்பாடுகள் விதிப்பு

பாமக மாநாடு- வன்னியர் கட்டுப்பாடுகள் விதிப்பு

பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் நடைபெறவுவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லடசம் பேர் வரவுள்ளனர்.

இதன் காரணமாக எந்தவித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் வன்முறை ஏற்பட்டது. நினைவு சின்னங்கள் மீது ஏறியும், நள்ளிரவை கடந்து மாநாட்டை நடத்தியும், விடுதலை சிறுத்தைகளின் கட்சி கொடியை வெட்டியும் பதற்றமான நிலை நீடித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா

சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா

இதனையடுத்து பாமகவிற்கு எதிராக சட்டசபையில் ஜெயலலிதா எச்சரித்தார். இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என பேசினார். மேலும் ராமதாஸ் மீது வழக்கும் பதியப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது.

 மாநாடு நடைபெற உள்ள நிலையில் நள்ளிரவில் அன்புமணி ராமதாஸ் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கையில், வன்னியர் சங்கத்தின் அடையாளமான வன்னியர் TATTOO இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் ஜொலி ஜொலிக்கும் மாநாட்டு  திடலை பார்வையிட்டனர்.

35
போலீசார் 10 கட்டுப்பாடுகள்

போலீசார் 10 கட்டுப்பாடுகள்

இதனிடையே பாமகவினருக்கு போலீசார் 10 முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள் :

1. சித்திரை முழுநிலவு பெருவிழாவிற்கு வருபவர்கள்  VEHICLE PASS பெற்றே மாநாட்டிற்கு வரவேண்டும். VEHICLE PASS இல்லாத வாகனங்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதி இல்லை

2. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலுக்கேற்ப அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். 

3. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி  உள்ளிட்ட இடங்களிலிருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ECR வழியாக மாநாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் GST சாலையை பயன்படுத்த வேண்டும்.
 

45
ECR சாலையில் பயணத்தை தவிர்த்திடுங்கள்

ECR சாலையில் பயணத்தை தவிர்த்திடுங்கள்

4. இருசக்கர வாகனங்களில் மாநாட்டிற்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

5. மாநாட்டிற்கு வருபவர்கள்மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதோ பொது இடங்களில் மது அருந்துவதோ கூடாது.

6.வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே வாகனத்தை நிறுத்தி இறங்க வேண்டும்.

7. கடல் நீரில் விபத்துக்களை தவிர்க்கவும் பங்கேற்பாளர்கள் மாநாட்டுத் திடலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது.

8.பொதுமக்கள் ECR சாலையில் பயணத்தை தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது. 

55
மாமல்லபுரம் சுற்றுலாவை தவிர்த்திடுங்கள்

மாமல்லபுரம் சுற்றுலாவை தவிர்த்திடுங்கள்

9.  சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாமல்லபுரம் மற்றும் பிற சுற்றுலாத்தலங்களை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

10.சித்திரை பவுர்ணமி கிரிவலம் காரணமாக  திருவண்ணமலைக்கு பெருமளவில் வாகனம் போக்குவரத்து இருக்கும் என்பதால்  சென்னையிலிருந்து மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பத்தூர். சேலம் வழித்தடத்தினையும் மறுமார்க்கத்தில் சேலம் திருப்பத்தூர், வேலூர் வழித்தடத்தினையும் பயன்படுததுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்
காவல்
போக்குவரத்து காவல்துறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை.! குடிமகன்களுக்கு ஷாக்
Recommended image2
பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு: இலச்சினை வெளியீடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved