பேரனை விட்டுக்கொடுக்காத தாத்தா! அன்புமணிக்கு எதிராக ஒரே போடாக போட்ட ராமதாஸ்!
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
PMK General Committee Meeting
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 28ம் தேதி அன்று நடைபெற்றது. பாமக நிறுவனர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி, கௌரவத்தலைவர் ஜி.கே. மணி மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Ramadoss
அப்போது பொதுக்குழுவில் ராமதாஸின் மூத்த மகளின் பையனும், தனது பேரனுமான முகுந்தன் பரசுராமனை பாமகவின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி - ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அன்புமணி கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் அரசியல் அனுபவம் இல்லாதவரை இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுப்பதா? குடும்பத்தில் எத்தனை பேருக்கு பதவி வழங்குவீர்கள் என கூறிவிட்டு மைக்கை தூக்கி போட்டார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் விடுமுறை! இந்த மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்கள் லீவு?
Anbumani
இதற்கு ராமதாஸ் கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவுகளை நான் தான் எடுப்பேன். விருப்பம் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் காட்டமாக கூறினார். இதனால் கடுப்பான அன்புமணி பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருக்கிறேன். என்னை அங்கே வந்து சந்திக்கலாம் என்று கூறிவிட்டு சென்றார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது. இதனையடுத்து இருவரையும் பாமக நிர்வாகிகள் சமாதானம் செய்தனர்.
PMK Youth League leader
பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்னால் உங்களுக்குள் தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என்று கூறிய முகுந்தன் இளைஞரணி தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் கட்சியில் தனக்கு பொறுப்பு வேண்டாம் என்று இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: கைவிட்ட நீதிமன்றம்! வேறு வழியே இல்லை! சிறைக்கு செல்கிறார் எஸ்.வி.சேகர்!
PMK
இந்நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ்: அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை. பேசி சரியாகிவிட்டது. பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம். பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் தொடர்வார். பொதுக்குழுவில் அறிவித்த மறுநாளே அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டேன். பொதுக்குழுவில் நடந்த பிரச்சனை, கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்காது. என் தவறுகளை விமர்சியுங்கள். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் எனக்கு கோபம் வராது என தெரிவித்தார்.
Mukundan Parasuraman
பாமக இளைஞரணி தலைவர் முகுந்தன் யார்?
பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி எனும் காந்திமதி. இவரது கணவர் பரசுராமன். மருத்துவரான இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ராமதாஸ் நடத்தி வரும் மருத்துவமனையை வழிநடத்தி வருகிறார். காந்திமதி - பரசுராமன் தம்பதிக்கு இரண்டு மகன்கள். ப்ரீத்திவன் மற்றும் முகுந்தன். இதில் ப்ரீத்திவன் அன்புமணியின் மருமகன். அதாவது தமது மூத்த மகள் சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அக்கா மகன் மற்றும் தனது மருமகனின் தம்பி இவ்வளவு நெருக்கமான உறவு இருந்தும் முகுந்தனுக்கு பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுத்ததற்கு அன்புமணி எதிர்க்க வேறு காரணம் என கூறப்படுகிறது.