கைவிட்ட நீதிமன்றம்! வேறு வழியே இல்லை! சிறைக்கு செல்கிறார் எஸ்.வி.சேகர்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

Chennai High Court confirms sve shekher jail sentence tvk

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் விடுமுறை! இந்த மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்கள் லீவு?

மேலும், தீர்ப்பு விதிக்கப்பட்ட பின் அபராத தொகையை செலுத்தியதோடு, தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனால் அந்த தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என எஸ்.வி.சேகர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற பிறகு  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க:  பொங்கல் பரிசு தொகுப்பு! வீடு தேடி வரும் டோக்கன்! பொதுமக்களுக்கு எப்போது கிடைக்கும்? வெளியான குட்நியூஸ்!

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட வழக்கில், எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத கால சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், சிறை தண்டனையை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios