- Home
- Tamil Nadu News
- திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்!
திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்!
நெல்லை மாவட்ட திமுக பொருளாளர் செல்வ சங்கர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அவரது கார்கள் சேதமடைந்தன.

தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர்
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வ சங்கர்( 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி பாளைங்கோட்டை ஊராட்சி ஒன்றிய 9வது வார்டு கவுன்சிரலாக உள்ளார். வழக்கம் நேற்று இரவு சாப்பிட்டு குடும்பத்தினருடன் தூங்க சென்றனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்நிலையில் இன்று அதிகாலை இவரது வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்த செல்வ சங்கர் வீட்டில் முன்பு இருந்த கார்கள் சேதமடைந்தன. பின்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்பகை காரணமாக நடைபெற்றதா?
முன்பகை காரணமாக நடைபெற்றதா? அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.