- Home
- Tamil Nadu News
- மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிக்க அழைப்பு- தகுதிகள் என்ன தெரியுமா.?
மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிக்க அழைப்பு- தகுதிகள் என்ன தெரியுமா.?
தமிழக அரசு, நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.6000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஜூலை 31, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசின் ஒய்வூதிய திட்டங்கள்
தமிழக அரசு பல்வேறு பிரிவினருக்காக பல ஓய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் அரசு ஊழியர்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம் என பல திட்டங்களை நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் படி நடப்பு ஆண்டில் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டுத்துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் அலுவலக முகவரிக்கு நேரில் சமர்ப்பித்திட வரவேற்கப்படுகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
1. தகுதி வாய்ந்தவர்கள்:
தமிழகத்தை சேர்ந்தவர்களாக ஆக இருக்க வேண்டும்/
தற்போது நலிந்த நிலையில் ( வருமானம் குறைந்த, வேலை இல்லாத நிலை போன்றவை) இருப்பது.
அரசு/தனியார் நிறுவனங்கள் அல்லது ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports Meet) வெற்றிபெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
2. தகுதிகள்:
சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.
சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் /மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும்.
ஓய்வூதியம் பெற தகுதிகள் என்ன.?
3. தகுதியான விளையாட்டுப் போட்டிகள்:
ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் / இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
4. வயதுவரம்பு :
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (30.04.2025) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
5. மாத வருமானம் :
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ. 6000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். (இதற்கான 2025 ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்திட வேண்டும்).
விளையாட்டு வீரர்கள் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
6. விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு இணையதளத்தில் https://sdat.tn.gov.in கிடைக்கும் மற்றும் ஆணையத்தின் படிவம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
7. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள்.
வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்).
பிறப்பிடச் சான்று (2025 ஆம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்).
வருமானச் சான்று (2025 ஆம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்).
ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் ( தொழில்/ விளையாட்டு சார்ந்த).
8. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் முறை:
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பதாரர் சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட (ம) இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.
ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கடைசி தேதி
முக்கிய குறிப்பு:
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பதாரர் சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட (ம) இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கிட வேண்டும். சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகதிற்கு நேரில் வராவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடத் தேவையில்லை.
10. விண்ணப்பிக்க கடைசி தேதி:
ஓய்வூதியம் பெருவதற்கான விண்ணப்பங்கள் 24.06.2025 முதல் 31.07.2025 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்கள் உரிய ஆவணங்களுடன் இணைத்து 31.07.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதாரர் சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட (ம) இளைஞர் நலன் அலுவலகம், நேரு பூங்கா, சென்னை-84. முகவரியில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும். இது தொடர்பான இதர விவரங்களுக்கு தொலைபேசி எண் (7401703480) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, சென்னை மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த தகுதியுடைய முன்னாள் விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.