- Home
- Tamil Nadu News
- அண்ணாமலை பேரை சொன்னால் திமுக நடுங்கும்..! மீண்டும் ஹைலைட்க்கு வருகிறார்.. அடித்து சொல்லும் தமிழா தமிழா பாண்டியன்
அண்ணாமலை பேரை சொன்னால் திமுக நடுங்கும்..! மீண்டும் ஹைலைட்க்கு வருகிறார்.. அடித்து சொல்லும் தமிழா தமிழா பாண்டியன்
அண்ணாமலையின் பெயரைச் சொன்னாலே திமுக நடுங்கும். திமுகவை அடிப்பதற்காக அண்ணாமலை மீண்டும் முதன்மைபடுத்தப்படுவதாக யூடியூபர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மாநில தலைவராக அண்ணாமலையின் செயல்பாடு
பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளையும் பாரபட்சமின்றி விமர்சித்தார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுகவை கேப் விடாமல் எகிறி அடித்தார். மேலும் திமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்களின் ஊழல் பட்டியலை DMK Files என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டு அடுத்தடுத்து அதிரடி காட்டினார். அண்ணாமலை தலைவராக இருந்த வரை தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகவா? அல்லது பாஜகவா? என்று சந்தேகம் எழும் அளவிற்கு அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்கும்.
கூட்டணியில் இருக்கும்போதே அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலை
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்த கூட்டணி இருக்கும் போதே அதிமுக தலைவர் ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்தது அதிமுக தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்த கூட்டணியும் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின. ஆனால் இரு கட்சிகளும் தனித்தனியாக பெற்ற வாக்குகளை சேர்த்தால் அது திமுக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடித்திருக்கலாம். இந்த கூட்டணியின் முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம். கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் தேசய ஜனநாயகக் கூட்டணிக்கு கணிசமான எம்பிகள் கிடைத்திருப்பார்கள் என்று விமர்சிக்கப்பட்டது.
தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு
சட்டமன்ற தேர்தலை மனிதில் வைத்து அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க பாஜக தலைமை விருப்பம் தெரிவித்தது. ஆனால் அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினால் தான் கூட்டணி அமைப்போம் என்ற அதிமுகவின் அழுத்தத்தைத் தொடர்ந்து அண்ணாமலை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார்.
அண்ணாமலையின் தேவை பாஜகவுக்க தேவை..
ஆனால் சமீப காலமாக அண்ணாமலை மீண்டும் முக்கியத்துவம் பெற்று வருகிறார். குறிப்பாக SIR பரிசீலனைக்கான பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை தலைமை வகித்தார். இந்நிலையில் பிரபல யூடியூபர் தமிழா தமிழா பாண்டியன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “பாஜவைப் பொறுத்தவரை திமுகவை அடிப்பதற்கு அண்ணாமலை தேவை. திராவிட கட்சிகளை எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்ற வித்தையை அண்ணாமலை தெரிந்து வைத்திருக்கிறார். அவரை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.
அண்ணாமலை பெயரை சொன்னால் திமுக நடுங்கும் - பத்திரிகையாளர் பாண்டியன். @annamalai_k 🔥 pic.twitter.com/S7E36I4ghN
— Mega Vannan (@Mega_VannanJM) December 3, 2025
அண்ணாமலை என்றால் திமுக நடுங்கும்..
அண்ணாலையின் பெயரைச் சொன்னால் திமுக நடுங்கும். மேலும் திமுகவை அடிப்பது அண்ணாமலைக்கு கைவந்த கலை. திமுகவை எதிர்ப்பதை மட்டுமே தனி பிராஜக்டாக அண்ணாமலைக்கு வழங்கப்படும். இதனால் அண்ணாமலை முதன்மைபடுத்தப்படுகிறார். அவருக்கான மதிப்பும் அதிகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

