- Home
- Tamil Nadu News
- அதிமுக.வுக்கு ஆப்பு அடிக்கும் தளபதி! 2026ல் மீண்டும் திமுக தான் - கருத்து கணிப்பில் வெளியான பரபரப்பு தகவல்
அதிமுக.வுக்கு ஆப்பு அடிக்கும் தளபதி! 2026ல் மீண்டும் திமுக தான் - கருத்து கணிப்பில் வெளியான பரபரப்பு தகவல்
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளையே பிரிக்கும், இது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று வெளியாகியுள்ள கருத்து கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் திமுக
தமிழகத்தில் அடுத்த அண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்துவதிலும், சிறிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் அதிக தொகுதிளைப் பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. திமுக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் அணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகளுடன் இந்த தேர்தலையும் சந்திக்கிறது. அதே போன்று அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா டுடே - சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி மனநிலை நிலவினாலும் அதிமுக, பாஜக கூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்து.
தமிழக உரிமையை நிலை நாட்டுவதில் உறுதியாக இருக்கும் திமுக
இந்தி எதிர்ப்பு, இருமொழி கொள்கை உள்ளிட்ட மாநில உரிமை சார்ந்த விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிரான திமுக.வின் போராட்டங்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு இருப்பதால் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
அதிமுக வாக்குகளை வேட்டையாடும் விஜய்
திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்குகளை மட்டுமே பிரிப்பார். இது திமுக கூட்டணிக்கு சாதகமாகவே அமையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47 சதவீத வாக்குகளைப் பெற்ற திமுக கூட்டணி தற்போது தேர்தல் நடைபெற்றால் 48 சதவீத வாக்குகளைப் பெறும்.
மீண்டும் பாஜக
தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் மத்தியில் பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றால் பாஜக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.