MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போலீசிடம் மீண்டும் வசமாக சிக்கிய டிடிஎஃப் வாசன்.. ஸ்பீடா போனது ஒரு குத்தமா.! கதறும் TTF ரசிகர்கள்

போலீசிடம் மீண்டும் வசமாக சிக்கிய டிடிஎஃப் வாசன்.. ஸ்பீடா போனது ஒரு குத்தமா.! கதறும் TTF ரசிகர்கள்

சர்ச்சைகளுக்கு புகழ்பெற்றவர் பிரபல யூடியூப்பர் ஆன டிடிஎஃப் வாசன். இவர்  தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 16 2023, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வருபவர் டிடிஎஃப் வாசன் (TTF வாசன்). இவர் பைக் ரைடிங் செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பேமஸ் ஆனார். இதன் காரணமாக இவருக்கு யூடியூப்பில் 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் எந்த அளவுக்கு பிரபலம் ஆனாரோ அந்த அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

25

கடந்தாண்டு பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் அதிவேகமாக சென்று வீடியோ வெளியிட்டு இருந்தார் டிடிஎஃப் வாசன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் தலா 2 வழக்குகளை பதிவு செய்தனர்.

35

மதுரைக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பாக அவர் சரணடைந்தார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் சும்மாக இருந்தாலும், இவரது ரசிகர்கள் இவரை சும்மா விடுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

120 பெண்கள்.. 1900 நிர்வாண படங்கள்.. 400 ஆபாச வீடியோக்கள்! யார் இந்த நாகர்கோவில் காசி.?

45

இந்த நிலையில் மற்றொரு சம்பவத்தில் சிக்கியுள்ளார் டிடிஎஃப் வாசன். நீலகிரி மாவட்டம், உதகைக்கு வந்த பிரபல யூட்டியூபர் டிடிஎஃப் வாசன் ஹில்பங்க் என்னும் பகுதியில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் அவரை நிறுத்த முற்பட்ட போது நிற்காமல் சென்றுள்ளார்.

55

பிறகு அவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதாக மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்த டிடிஎஃப் வாசனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

 

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்லகண்ணு ஐயா தான் உதாரணம் ! பிரேமலதா பேட்டி
Recommended image2
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image3
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved