- Home
- Tamil Nadu News
- மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கும் வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? அள்ளிச்செல்லும் மக்கள்
மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கும் வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? அள்ளிச்செல்லும் மக்கள்
சமையலுக்குத் தேவையான வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையில் ஏற்ற இறக்கம். வெங்காயத்தின் விலை சரிந்து ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம், தக்காளியின் விலை உயர்ந்து ஒரு கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சமையலில் தக்காளி, வெங்காயம்
சமையலில் ரசம் முதல் பிரியாணி சமைப்பது என எந்த வித சமையலாக இருந்தாலும் முக்கிய தேவையாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும், இந்த இரண்டும் தான் உணவில் ருசியையும், சுவையையும் கொடுக்கும். எனவே பொதுமக்கள் காய்கறிகள் சந்தையில் எந்த காய்கறிகள் வாங்குகிறார்களோ இல்லையோ தக்காளி, வெங்காயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை அதோ கதி தான். மேலும் மாத பட்ஜெட்டில் தக்காளி, வெங்காயத்திற்கு என மடங்கு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாயை தாண்டியது. தக்காளி விலை ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானது.
வெங்காயத்தின் விலை
இதனால் சமையலில் தக்காளி, வெங்காயம் இல்லாமல் மக்கள் சமைக்க தொடங்கினர். எனவே எப்போதும் விலை குறையும் என ஏக்கத்தோடு காத்திருந்த மக்களுக்கு ஜாக்பாட் பரிசாக விலையானது சரசரவென குறைந்தது. வெங்காயமானம் நாசிக் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வரத்து அதிகரித்தது.
இதனால் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையானது தற்போது மேலும் குறைந்து ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 5 கிலோ வெங்காயம் கோயம்பேடு சந்தையில் விற்க்கப்படுவதால் பொதுமக்கள் பை நிறைய அள்ளிசெல்கிறார்கள்.
மூட்டை, மூட்டையாக வெங்காயம்
இதே போல தக்காளியின் விலையும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது தக்காளி விலையானது உயரத்தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது.
அந்த வகையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி 35 முதல் 45 ரூபாய்க்கு விற்க்கப்பட்டு வருகிறது.
கோயம்பேட்டில் காய்கறி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பச்சை காய்கறிகள் விலை
அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,
கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.