- Home
- Tamil Nadu News
- டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற தேர்வர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற தேர்வர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு 659 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சென்னையில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள்
அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாகும். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக அரசில் காலியாக உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. எனவே பல லட்சம் இளைஞர்கள் அரசு பணியின் தேர்வான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இரவு, பகல் பாராமல் படிப்பார்கள்.
அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுவானது நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது குரூப் 2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்த காலியிடங்கள் 659 (குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு)குரூப் 2 (நேர்காணல் பதவிகள்) 50 காலியிடங்கள், குரூப் 2ஏ (நேர்காணல் இல்லாத பதவிகள்): 595 காலியிடங்கள் ஆகும்.
குரூப் 2 தேர்விற்கான விண்ணப்பம் தொடங்கியது
குரூப் 2 தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஆகஸ்ட் 13 அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருந்தால் திருத்த ஆகஸ்ட் 18 முதல் 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பமானது ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். (www.tnpsc.gov.in அல்லது https://apply.tnpscexams.in)தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரும் நிலையில், தேர்வர்களுக்கு உதவிடும் வகையில் இலவச பயிற்சியானது பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 இலவச பயிற்சி
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC-GROUP-II & IIA தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை மாவட்டம், கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC-GROUP-II & IIA தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21-07-2025 முதல் துவங்கப்பெற்று நடைபெற்று வருகிறது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாய்ப்பு
இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னையில் உள்ள C.S.I. காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2025 ஆகும்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவியர்கள் இணைய வழியில் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.