தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா? ஆம்னி பஸ் புதிய கட்டணம் எவ்ளோ தெரியுமா?
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் விமானக் கட்டணத்தை விட அதிகமாக உள்ளது. இந்தக் கட்டண உயர்வு தற்காலிகமானது என்றும், வழக்கமான நாட்களில் கட்டணம் குறைவாக இருக்கும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
omni bus
தீபாவளி கொண்டாட்டம்
சொந்த ஊரில் படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாத காரணத்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், அதிக சம்பளத்திற்காகவும் சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களூர், உள்ளிட்ட பல ஊர்களுக்கு வேலை தேடி லட்சக்கணக்கானோர் செல்கின்றனர். அந்த வகையில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, ரம்ஜான் போன்ற தொடர் விஷேச நாட்களில் தான் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். தங்களது பெற்றோர், உறவினரகள் மற்றும் நண்பர்களோடு கொண்டாட திட்டமிடுவார்கள். அப்படி தொடர் விடுமுறை காலத்தில் செல்பவர்களுக்கு பயண கட்டணம் தான் தலையை சுற்ற வைக்கும். அந்த வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவானது 3 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது.
omni bus
ஆம்னி கட்டணம் என்ன தெரியுமா.?
இதனால் வேறு வழியின்றி பேருந்தில் செல்ல திட்டமிடுவார்கள். அப்படி அரசு பேருந்தில் பொறுத்தவரை எப்போதும் வசூலிக்கும் கட்டணம் தான் தொடரும். ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் தான் விமான கட்டணத்தையே தாண்டி விடும்.அப்படித்தான் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் ஷாக் கொடுத்துள்ளது.
ஏற்கனவே உள்ள கட்டணத்தோடு 20 % அதிக கட்டணம் உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த கட்டணமே 100 சதவிகிதம் வரை உயர வாய்ப்பு உள்ளத்தாக கூறுகின்றனர். அந்த வகையில் இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதிய கட்டணத்தை ஆம்னி பேருந்து அறிவித்துள்ளது.
omni bus
கிடு, கிடுவென உயர்ந்த கட்டணம்
அந்த வகையில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு அமர்ந்து செல்லும் வகையிலான டிக்கெட் கட்டணம் 1730 ஆக நிர்ணயித்துள்ளது. இதுவே ஸ்லிப்பர் கட்டணம் 2090 ரூபாயும், ஏசி அமர்ந்து செல்லும் ஆம்னி கட்டணம் 1990 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி ஸ்லீப்பர் கட்டணம் 2460 ஆகவும், பிரீமியர் ஸ்லீப்பர் கட்டணம் 2890 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு உட்கார்ந்து செல்லும் இருக்கை கட்டணம் 1690, நான் ஏசி ஸ்லீப்பர் கட்டணம் 2010 ரூபாயாகவும், ஏசி வசதியுடைய உட்கார்ந்து செல்லும் இருக்கை கட்டணம் 1920 ரூபாயாகவும், ஏசி ஸ்லீப்பர் கட்டணம் 2330 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ கோவை கட்டணம் என்ன.?
சென்னையில் இருந்து நெல்லைக்கு உட்கார்ந்து செல்லும் இருக்கை கட்டணம் 1960 ரூபாயாகவும், ஏசி இல்லாத படுக்கை வசதி 2380 ரூபாயும், ஏசியுடன் இருக்கை வசதி கொண்ட இருக்க கட்டணம் 2060 ரூபாயும், ஏசியுடன் ஸ்லீப்பர் கோச் 2800ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் பல்வேறுஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்தின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக உயர்வு மட்டுமே
புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணப் பட்டியலை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் (https://www.toboa.in/) என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த கட்டணம் தற்போதைக்கு மட்டுமே எனவும், தீபாவளி பண்டிகை நாட்களில் கூடுதல் சேவை இயக்குவதால் தற்போதைய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற சாதாரண நாட்களில் 500 ரூபாய்க்கு கூட ஏசி ஸ்லீப்பர் கட்டணம் இருக்கும் எனவும் தெரிவித்தனர். இதனிடையே அரசு பேருந்து மற்றும் ரயில் கட்டணத்தை ஒப்பீடு செய்யும் போது ஆம்னி பேருந்து உச்சத்தை தொட்டுள்ளது. இதனிடையே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களை 1800 425 6151 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது