MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரு ரூபாய் செலவு இல்லை.! விமான பணிக்கு பயிற்சி- மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

ஒரு ரூபாய் செலவு இல்லை.! விமான பணிக்கு பயிற்சி- மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

12 ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு சர்வதேச விமான நிலையப் பணிகளுக்கான பயிற்சியை வழங்குகிறது. 6 மாத கால பயிற்சிக்குப் பின், சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் ரூ.20,000 முதல் ரூ70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : Dec 29 2024, 07:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
JOB ALERT

JOB ALERT

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி வேலை தேடும் இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில்  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

25
airport job training

airport job training

விமான நிலையத்தில் பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படைபடிப்பு (Air Cargo Introductory+ DGR) சரக்கு ஏற்றுமதி மற்றும்இறக்குமதி அடிப்படை படிப்பு (Passenger Ground Services + Reservation Ticketing) சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு (Foundation in Travel and Tourism) போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

35
free flight tickets to indians

free flight tickets to indians

முழு செலவை ஏற்கும் தாட்கோ

இந்த யிற்சியினை பெற 12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும்  6 மாத கால பயிற்ச்சி வழங்கப்பட இருப்பதாகவும், இதற்காக 6 மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95,000/-த்தை தாட்கோவால் மேற்கொள்ளப்படும் என சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

45
airport job training

airport job training

வேலைவாய்ப்பு

இப்பயிற்சியினை வெற்றிதரமாக முடிக்கும் பட்சத்தில் IATA-International Air Transport Association-Canda மூலம் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.  (Indigo, Airlines, Spice Jet. Go First, Air India). சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.20,000/- முதல் ரூ.22,000/- வரைபெறுவதற்கு வழிவகை செய்யப்படும், பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- ஊதிய உயர்வு பெறலாம்

55
airport job

airport job

மாத சம்பளம் இவ்வளவா.?

. இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னனி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களான Indigo. Air India, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Wings vacation, Zenith Tours, Alhind Tours & Money Exchange போன்றவைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு.க.சு.கந்தசாமி தெரிவித்துள்ளார்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved