- Home
- Tamil Nadu News
- மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஒரு வாரம் தான் டைம்! தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட கோர்ட்!
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஒரு வாரம் தான் டைம்! தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட கோர்ட்!
Old Pension Scheme in Tamil Nadu: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதி
திமுக தேர்தலில் வாக்குறுதி கொடுத்தது போல பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் முடிவில் தமிழக அரசு இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரேடெரிக் ஏங்கெல்ஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டம்
அதில் தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 01.04.2003-க்கு பிறகு தமிழக அரசில் பணி வாய்ப்பு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அரசாணை எண்: 259, 06.08.2003-இன் படி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இதற்கான விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. மத்திய அரசு சாா்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது.
தமிழக அரசு
12 ஆண்டுகளாகியும் தமிழக அரசு இந்த ஆணைய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதன் காரணமாக ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாமல் பலர் உள்ளனர் என தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து வழக்கு விசாரணை வருகிற 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.