பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களா நீங்கள்.! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். தேர்வுக் கட்டண விலக்கு பெற்ற மாணவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
school exam
மாணவர்களுக்கு பொதுத்தேர்வு
மாணவர்கள் உயர்கல்வி படிப்பில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியமானதாகும், அந்த வகையில் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்தே உயர்கல்வியில் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில், பிடித்த பாடங்களை எடுக்க முடியும். அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வு கட்டணம்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
இதன் படி, 2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தியுள்ளது.
அதன் படி தேர்வுக் கட்டணத் தொகையினை ஆன்லைன் வாயிலாக இன்று (18.11.2024) பிற்பகல் முதல் 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான செலுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டோர் விவரம்
தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு
பி.சி/ பி.சி.எம். பிரிவு - பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் இருப்பவர்களுக்கு மட்டும்
அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் பார்வை குறைபாடுடைய மற்றும் செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுடைய மாணவர்கள்.
MBC/ DC பிரிவினருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு எதும் இல்லை.
SC/ SCA/ ST மற்றும் எஸ்சி Converts (SS) - பெற்றோருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு எதும் இல்லை.
school exam
தேர்வு கட்டணம் கட்ட வேண்டியவர்
சுயநிதி/ மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள் சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு இல்லை
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரியர் தேர்வுக் கட்டணம்
மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வினை தற்போது எழுதுவதற்கான தேர்வுக் கட்டணத் தொகையினை சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து பெற்று தலைமை ஆசிரியர்கள் வருகிற 20.11.2024 அன்று பிற்பகல் முதல் 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான நாட்களில் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைன் வழியாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.