- Home
- Tamil Nadu News
- Rain: வடகிழக்கு பருவமழைக்கு குட்பாய்! இனி மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? வானிலை கூறுவது என்ன?
Rain: வடகிழக்கு பருவமழைக்கு குட்பாய்! இனி மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? வானிலை கூறுவது என்ன?
வடகிழக்கு பருவமழை விலகும் நிலையில், பொங்கல் பண்டிகையின் போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால், தமிழகத்தின் பிற பகுதிகள் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மழைக்கு வாய்ப்பா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடுங்க வைக்கும் அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு முதல் காலை 9 மணி வரை வெளியே வருவதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை
அதன்படி வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வறண்ட வானிலை
ஜனவரி 16 முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 19 மற்றும் 20ம் தேதி தமிழகம். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

