MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் 'சென்னை உலா' என்ற பெயரில் பாரம்பரிய பேருந்து சுற்றுலாவை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் சேவையானது, 1980களின் பாணியிலான பேருந்துகளைக் கொண்டு சென்னையின் முக்கிய இடங்களை இணைக்கிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 14 2026, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பொங்கல் பண்டிகை
Image Credit : Asianet News

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நகரின் முதன்மை பொது பேருந்து நிறுவனமான சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், ஒரு அற்புதமான நகர சுற்றுலா அனுபவத்தை வழங்கத் தொடங்குகிறது. சென்னை உலா பேருந்து "ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப்" சேவைகளுடன் முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்க வடிவமைக்கப்பட்ட வட்டச் சுற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் பண்டிகைக் காலத்தில் நகரின் பாரம்பரிய அடையாளத்தை சென்னை வாழ் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பழங்கால மற்றும் பாரம்பரியத்துடன் கூடிய 5 பேருந்துகள்
Image Credit : Asianet News

பழங்கால மற்றும் பாரம்பரியத்துடன் கூடிய 5 பேருந்துகள்

* பழங்கால/பாரம்பரியம்-1980களின் காலகட்ட பேருந்துகள் - சென்னையின் பொதுப் போக்குவரத்து பரிணாமத்தை நினைவு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* பயணிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுத்தத்திலும் ஏறவும் இறங்கவும் கூடிய ஹாப்-ஆன் ஹாப்-ஆஃப் (HO-HO) மாதிரி - அணுகல் மற்றும் வசதி உள்ளது.

* குறிப்பாக மகளிர், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பள்ளி குழுக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நன்மை பயக்கும்.

* இந்த பாரம்பரியப் பேருந்தில், மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

34
பேருந்துகளில் உள்ள சிறப்பு சேவைகள்
Image Credit : Asianet News

பேருந்துகளில் உள்ள சிறப்பு சேவைகள்

* சென்னையில் உள்ள முக்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அடையாளங்களை இணைக்கும் வகையில் 30 கி.மீ நீளமுள்ள ஒரு வளையமாக இந்தப் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

* ஒரே ஒரு பயணச்சீட்டு மூலம் நாள் முழுவதும் பயணம் செய்வதற்குரிய கட்டணம் - ரூ. 50 மட்டுமே.

* சென்ட்ரல் ரயில் நிலையம். எழும்பூர் ரயில் நிலையம், மெரினா கடற்கரை மற்றும் நடத்துனரிடம் இருந்து இதற்குரிய பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

* மேலும், சென்னை ஒன் செயலி வழியாக மின்னணு பயண சீட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.

* மேலும் சொகுசுப் பேருந்து (Deluxe) கட்டணத்தில் மற்ற பேருந்துகளைப் போல இப்பேருந்தில் பயணிக்கலாம்.

* பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த சேவை ஜனவரி 16 முதல்18ம் தேதி காலை 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் இயக்கப்படும்.

* வார நாட்களில் மாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வார இறுதி நாட்கள்/பொது விடுமுறை நாட்களில் காலை 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் இயக்கப்படும்.

* அடுத்தடுத்த பேருந்து சேவை 30 நிமிட இடைவெளியுடன் இருக்கும்.

44
வின்டேஜ் பேருந்துகள்
Image Credit : Asianet News

வின்டேஜ் பேருந்துகள்

இதைப் போல் வின்டேஜ் தோற்றத்தில் உள்ள பேருந்துகள் உலகளவில் முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது. நமது சென்னை மாநகரத்திலும் மக்கள் சேவையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) "சென்னை உலா" பாரம்பரியப் பேருந்து விருப்பமான நிறுத்தத்தில் ஏறி பிடித்தமான இடத்தில் இறங்கி ரசிக்கலாம். மீண்டும் அடுத்து வரும் "சென்னை உலா" பேருந்தில் உங்கள் பயணத்தைத் தொடரலாம்.

இந்த முயற்சி பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மதிப்பு சேர்ப்பது மட்டுமல்லாமல் நகர்ப்புற கலாச்சார அனுபவங்களுடன் பொது போக்குவரத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தையும் உள்ளடக்கியது. இனிவரும் விழாக்களில் இதேபோன்ற பாரம்பரியம் மற்றும் சுற்றுலா இயக்க சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் இப்பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
பொங்கல்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai IT Manager : “அண்ணா” என்று அழைப்பார்களே.. எப்படி வேலையை விட்டு நீக்குவேன்? 12 ஊழியர்களுக்காக கண்கலங்கிய சென்னை ஐடி மேலாளர்!
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Chennai Rain Alert: சென்னைவாசிகளுக்கு எச்சரிக்கை.! இன்று இரவு மீண்டும் கனமழை வெளுக்கும்.! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
Related Stories
Recommended image1
ஓய்வூதியம் அதிரடி உயர்வு.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.! குஷியில் ஊழியர்கள்
Recommended image2
கொட்டிக்கிடக்கும் தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.? விண்ணை முட்டும் முருங்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved