பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்? அரையாண்டு விடுமுறை ரத்தா? உண்மை என்ன?
Half Yearly Exam Holiday: 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சில மாவட்டங்களில் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
Half yearly Exam
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Half yearly Exam School Student
இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், 10ம் வகுப்புக்கு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், 11ம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 வரையிலும், 12ம் வகுப்புக்கு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மீண்டும் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை மையம் சொல்வது என்ன? பரபரப்பு தகவல்!
School Student
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பள்ளிகளில் வௌ்ள நீர் சூழ்ந்தது. மேலும் பள்ளியில் உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மாணவர்களின் புத்தகமும் மழையில் நனைந்து வீணாகிவிட்டது.
half yearly exam postponed
இதனையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழை காரணமாக அவ்வப்போது பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களுக்கு சூப்பர் அறிவிப்பு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி !
Half yearly Exam Holiday
இதனால் அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கு திட்டப்படி அரையாண்டு விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 24ம் முதல் ஜனவரி 1ம் தேதி அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. . மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடக்கிறது. இதில், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.