டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத போறீங்களா.? தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளில் ஓஎம்ஆர் விடைத்தாளில் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. து. தேர்வர்கள் புதிய மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNPSC
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் மட்டும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பள்ளிப்படிப்பை முடித்து வேலை தேடி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்வார்கள். அதற்கு ஏற்றார் போல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலையானது கிடைத்து வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பாக வாரந்தோறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை தனியார் நிறுவனங்களோடு இணைந்து நடத்தி வருகிறது.
tnpsc
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
இதனால் பல லட்சம் இளைஞர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்கையில் அரசு பணியை கனவாக கொண்டு இளைஞர்கள் தேர்விற்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் இரவு பகல் பாராமல் படித்தும், தனியார் பயிற்சி நிறுவனங்களில் கோச்சிங் வகுப்பும் சென்று வருகிறார்கள். அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளானது நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் 75ஆயிரம் முதல் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
tnpsc
புதிய ஓஎம்ஆர் ஷீட்
அந்த வகையில் இளைஞர்களை தயார் செய்திடும் இலவச பயிற்சி வகுப்பையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளில் ஒருசில புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளில் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tnpsc
மாதிரி விடைத்தாள் வெளியீடு
இது தொடர்பான புதிய ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளின் மாதிரி படத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள வினாத்தாள் தொகுப்பு எண் வட்டங்களை கருப்பு நிற பால்பாயின்ட் பேனாவால் நிரப்புவது தொடர்பாகவும்,
கண்காணிப்பாளர் கையொப்பம் பகுதி மாற்றம் தொடர்பாகவும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் புதிய ஓஎம்ஆர் விடைத்தாள் மாதிரியை இணையதளத்தில் பார்த்து அறிந்து, தேர்வு எழுத வருமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.