MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பைக் வாங்க 12,000 ரூபாயை அள்ளித்தரும் தமிழக அரசு! வெளியான அசத்தல் அறிவிப்பு

பைக் வாங்க 12,000 ரூபாயை அள்ளித்தரும் தமிழக அரசு! வெளியான அசத்தல் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் விவாதத்தின் முடிவில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திருக்கோயில் பூசை உபகரணங்கள் வழங்குதல், திருமண உதவித்தொகை, அர்ச்சகர்களுக்கு இரு சக்கர வாகன மானியம், கோயில் திருப்பணிகளுக்கு நிதி உயர்வு உள்ளிட்டவை அடங்கும்.

2 Min read
Ajmal Khan
Published : Apr 18 2025, 07:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

New announcements from the Department of Charities : தமிழக சட்டப்பேரவையில் நிதி அறிக்கை மீதான விவாதம் முடிவுற்று புதிய, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் அந்த வகையில் அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் உள்ள 19,000 திருக்கோயில்களுக்கு ரூ.15 கோடியில் பித்தளை, தாம்பளம், தூபக்கால், மணி, விளக்கு உள்ளிட்ட பூசை உபகரணங்கள் வழங்கப்படும். 

26
Two-wheeler subsidy

Two-wheeler subsidy

இரு சக்கர வாகனம் வாங்க மானியம்

ஒரு கால பூசைத்திட்டம் ஏற்கனவே 18ஆயிரம் கோயில்கள் பயனடைந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.25 கோடி அரசு மானியத்தில் ஒருகால பூசைத் திட்டம் இவ்வாண்டு மேலும் 1,000 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். 

திருக்கோயில்கள் சார்பில் இவ்வாண்டு 1,000 இணைகளுக்கு ரூ.70,000/- மதிப்பிலான சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும். 

ஒரு கால பூசைத் திட்ட கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்,கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள கிராமக்கோயில் பூசாரிகள், ஆதி திராவிடர் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 10ஆயிரம் நபர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கதலா 12ஆயிரம் மானியமாக வழங்கப்படும். 

36
temple announcements

temple announcements

மாணவர்களுக்கு கட்டணமில்லா உணவு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் & பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்வு. 

புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் (ம) பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.8 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்வு. 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கு அனைத்து நாட்களிலும், மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும். 

46
sekar babu

sekar babu

கட்டண தரிசனம் ரத்து

திருக்கோயில் திருப்பணிகளுக்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்வு 

திருவண்ணாமலை, பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருச்செந்தூர், பழனி, திருவரங்கம், திருத்தணி உள்ளிட்ட 10 திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து 

இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் 70 ஓதுவார் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் 

பணிக்காலத்தில் இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 3 இலட்சம் குடும்பநல நிதியானது ரூ. 4 இலட்சமாக உயர்த்தப்படும். 
 

56
marriage assistance

marriage assistance

பேருந்தில் கட்டணம் இல்லா பயணம்

இறை தரிசனத்திற்கு  வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திருக்கோவில் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.

வின்ச் மற்றும் ரோப் கார்களில் கட்டணம் இல்லை. இறை தரிசனத்திற்கும் கட்டணம் இல்லை.

மகாசிவராத்திரி 3 கோவில்களில் கூடுதலாக நடத்தப்படும். 

சேமநல நிதி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை 2000 ஆயிரம் வழங்கப்படும். 

66
HR&CE department

HR&CE department

ஆன்மிக பயணத்திற்கு மானியம் அதிகரிப்பு

முக்திநாத்(நேபாளம்) ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் 500 பக்தர்களுக்கு வழங்கப்படும் மானியம் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்வு

மானசரோவர்(சீனா) ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் 500 பக்தர்களுக்கு வழங்கப்படும் மானியம் 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்வு

ரூ.1 கோடியில் வேலூர் மாவட்டம், வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்குப் புதிய வெள்ளித் தேர் செய்யப்படும். 

திருவரங்கம் கோவிலில் புதிய கோயில் கட்டக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைக்கப்படும். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
சேகர்பாபு
பழனி முருகன் கோவில்
தமிழ்நாடு சட்டமன்றம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved