பேய் பிடித்ததும் சரளமாக தமிழில் பேசும் நேபாள பெண்.? வெளியான அதிர்ச்சி தகவல்
நேபாளத்தை சேர்ந்த கார் சுத்தம் செய்யும் நபரின் மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாகவும், இதனையடுத்து அந்த பெண் சரளமாக தமிழ் பேசுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திகிலூட்டும் பேய் படங்கள்
திகிலூட்டும் பேய் படங்களை பார்ப்பது திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, அதே நிஜத்திலும் பேய் உள்ளது எனக்கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். பல இடங்களில் பேய் பிடித்தவர்கள் புது விதமான செயல்களில் ஈடுபடுவது, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேசுவதும் கேள்விப்பட்டது உண்டு. அப்படி ஒரு நிகழ்வு தான் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. சமூகவலைதள பக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டு வரும் நாராயணன் என்பவர் தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறுகையில்,
நேபாள பெண்ணை பிடித்த பேய்.?
என்னுடைய காரை தினந்தோறும் சுத்தம் செய்பவர் ஒரு மாத விடுமுறையில் வெளியூர் செல்வதாக கூறினார். அவசரநிலை இருப்பதாகவும், அவர் நேபாளத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து அந்த நபரின் பயணத்திற்கு கொஞ்சம் பணத்துடன் உதவ முன்வந்தேன், அப்போது அந்த நேபாள நபர் கூறியது தான் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இது தொடர்பாக அந்த நேபாள நபர் கூறும்போது என் மனைவிக்கு ஒரு பேய் பிடித்திருக்கிறது என அதிர்ச்சி தகவலை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சரளமாக தமிழ் பேசும் நேபாள பெண்
கார் சுத்தம் செய்யும் நபரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது எனக்குத் தெரியும், இதயத்தில் ஒரு ஓட்டை இருப்பது போன்ற ஏதோ ஒரு பிரச்சனைகள் உள்ளது. ஆனால் அது மருத்துவ ரீதியாக இல்லை என்று அவர் நம்புகிறார். இது இயற்கைக்கு அப்பாற்பட்டது என நினைத்துக்கொண்டுள்ளார், அந்த பெண் கடந்த 6 மாதங்களாக, அவள் சரளமாக தமிழ் பேச ஆரம்பித்துவிட்டதாகவும், சில வார்த்தைகள் மட்டும் இல்லாமல். முழு வாக்கியங்களும். கிட்டத்தட்ட ஒரு தாய்மொழி பேசுபவரைப் போல. பேசுவதாக கூறியதாக தெரிவித்துள்ளார். இதுவரை தனது மனைவி தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவில்லையென்றும்,
நேபாள பெண்ணை கைவிட்ட மருத்துவம்
நேபாளி மக்கள் அதிகம் வாழும் பகுதியில் தான் வசித்து வருவதாகவும், இதனால் தமிழ் பேசுபவர்களோடு தொடர்பு குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை தான் உள்ளது என தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக அவர் தனது மனைவியை மருத்துவர்களிடம் (GH) அழைத்துச் சென்றதாகவும், அவர்களும் கைவிட்டுவிட்டார்கள்.
பின்னர் அந்த பெண்ணை அருகிலுள்ள ஒரு மசூதிக்கு அழைத்துச் சென்றார், கடந்த இரண்டு மாதங்களில் அவர்கள் சில சடங்குகளை முயற்சித்தனர். எந்த மாற்றமும் இல்லை. உண்மையில், அவள் இப்போது இன்னும் அதிகமாக தமிழ் பேசுவதாக அந்த தெரிவித்ததாக நாராயணன் தெரிவித்துள்ளார்.
நேபாளத்திற்கு திரும்பிய பெண்
இதனையடுத்து தான் பள்ளிவாசல் இமாம் சமீபத்தில் அவரிடம் கூறினார், அந்த பெண்ணை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள். அவள் இங்கேயே இருந்தால், அவள் உயிர் பிழைக்காமல் போகலாம். என தெரிவித்தாகவும் இதனையடுத்து தான் தங்கள் ஊருக்கே செல்வதாக அந்த நபர் குறிப்பிட்டதாக நாராயணன் பதிவு செய்துள்ளார்.
நாராயணனின் பதிவிற்கு பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக மறு ஜென்மமாக இருக்கலாம், தமிழை கற்றுக்கொண்டிருக்கலாம், பேய் எல்லாம் ஒன்றும் இல்லை, மன ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறி வருகிறார்கள். எனவே பேய் தொடர்பான இந்த பதிவு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.