இந்தியாவில் மர்மம் நிறைந்த 5 ரயில் நிலையங்கள்! யாரும் தனியாக போக மாட்டாங்களாம்!
இந்தியாவில் 5 ரயில் நிலையங்களில் பேய்கள் நடமாடுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இதனால் இந்த ரயில் நிலையங்களுக்கு செல்லவே பயப்படுகின்றனர். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவில் மர்மம் நிறைந்த 5 ரயில் நிலையங்கள்! யாரும் தனியாக போக மாட்டாங்களாம்!
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் 24 மணி நேரமும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவில் மர்மமான 5 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பேய்கள் நடமடுவதாகவும், அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். அது என்னென்ன ரயில் நிலையங்கள் என்பது குறித்து பார்ப்போம்.
பரோக் ரயில் நிலையம்
லூதியானா ரயில் நிலையம்
பஞ்சாபில் உள்ள லூதியானா ரயில் நிலைய நடைமேடையில் சோகமாக இறந்த ஒரு பெண்ணின் ஆவி நடமாடுவதாக வதந்தி பரவுகிறது. இந்த நிலையத்தில் பயங்கரமான அலறல்களைக் கேட்டதாகவும், மாயத்தோற்றங்களைக் கண்டதாகவும் ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் மர்மம் நிறைந்த ரயில் நிலையங்களில் முதல் இடத்தில் உள்ளது.
பரோக் ரயில் நிலையம்
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பரோக் ரயில் நிலையம் அழகிய மலைகளின் பின்னணியில் அமைந்துள்ளது. இது விசித்திரமான கதைகளுக்குப் பெயர் பெற்றது. இந்த ரயில் நிலையத்தின் கட்டிடக் கலைஞரான கர்னல் பரோக் அதன் கட்டுமானத்தின் போது தற்கொலை செய்து கொண்டதாகவும், சுரங்கப்பாதைக்கு அருகில் அவரது உருவம் நடமாடுவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் பலி; நடந்தது என்ன? யார் மீது தவறு?
பெகுன்கோடர் ரயில் நிலையம்
பெகுன்கோடர் ரயில் நிலையம்
வனங்களால் சூழப்பட்ட மேற்கு வங்காளத்தில் உள்ள பெகுன்கோடர் நிலையம் பேய் கதைகளுக்கு பெயர் பெற்றது. அதாவது வெள்ளைச் சேலை அணிந்த ஒரு பெண் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிவதாகவும், இரவில் தண்டவாளத்தில் நடந்து செல்வதாகவும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இந்த கட்டுக்கதைகளுக்கு பயந்தே ரயில் ஊழியர்கள் பலர் இங்கு வேலை செய்ய மறுத்துள்ளனர். இதனால் இந்த ரயில் நிலையம் மூடப்பட்டு, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. ஆனாலும் அந்த வெள்ளைச் சேலை பெண் குறித்த கதைகள் நின்றபாடில்லை.
சித்தூர் ரயில் நிலையம்
நைனி ரயில் நிலையம்
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நைனி ரயில் நிலையம், விசித்திரமான நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்றது. இந்த நிலையத்தின் நடைமேடைகளில் பேய் உருவத்தை பார்த்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கங்கை நதிக்கு அருகாமையில் இருக்கும் இந்த நிலையம் பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளதாக கதைகளை கூறுகின்றனர்.
சித்தூர் ரயில் நிலையம்
ஆந்திராவில் உள்ள சித்தூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி சுற்றித்திரிவதாக நம்பபப்படுகிறது. பயணிகளும், ரயில்வே ஊழியர்களும் பெரும்பாலும் இரவில் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாகக் கூறுகிறார்கள். இதனால் இரவில் தனியாக இந்த ரயில் நிலையத்துக்கு செல்ல பயப்படுகிறார்களாம்.
இந்தியாவில் 36,000 குழந்தைகள் மாயம்! கண்டுபிடிக்க முடியவில்லை! ஷாக் தகவல்!