MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நயினாரின் தில்லாலங்கடியை புட்டுப் புட்டு வைத்த நாஞ்சில் சம்பத்.! விஜய்-த்ரிஷா பேச்சுக்கு சவுக்கடி.!

நயினாரின் தில்லாலங்கடியை புட்டுப் புட்டு வைத்த நாஞ்சில் சம்பத்.! விஜய்-த்ரிஷா பேச்சுக்கு சவுக்கடி.!

nanjil sampath: அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 14 2026, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு
Image Credit : Asianet News

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு

தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக விஜய் குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கரூரில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தனர். சேலத்தில் நடந்த அதே கட்சியின், மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தவெக தலைவர் விஜய், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கங்கள் பற்றி நல்ல முறையில் பேச வேண்டும். அதற்கு முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என கூறியிருந்தார்.

25
வலுக்கும் கண்டனம்
Image Credit : our own

வலுக்கும் கண்டனம்

தவெக தலைவர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

Related Articles

Related image1
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!
Related image2
தவெகவுடன் கூட்டணி உறுதி..! காங்கிரஸ் எடுத்த சர்வேயால் ராகுல் குஷி..! ச.மூ.பவனில் பிரியாணி விருந்து..!
35
நாஞ்சில் சம்பத்
Image Credit : Asianet News

நாஞ்சில் சம்பத்

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

45
ஊருக்கு உபதேசம் செய்வதா?
Image Credit : Asianet News

ஊருக்கு உபதேசம் செய்வதா?

அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா? 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?

55
பொறாமைத் தீயில் நயினார்
Image Credit : Asianet News

பொறாமைத் தீயில் நயினார்

முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவெகவுடன் கூட்டணி உறுதி..! காங்கிரஸ் எடுத்த சர்வேயால் ராகுல் குஷி..! ச.மூ.பவனில் பிரியாணி விருந்து..!
Recommended image2
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!
Recommended image3
காலையிலேயே பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! சனிக்கிழமை அதுவுமா இன்று பள்ளிகள் முழு நேரம் செயல்படும்.!
Related Stories
Recommended image1
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!
Recommended image2
தவெகவுடன் கூட்டணி உறுதி..! காங்கிரஸ் எடுத்த சர்வேயால் ராகுல் குஷி..! ச.மூ.பவனில் பிரியாணி விருந்து..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved