- Home
- Tamil Nadu News
- நரிகளின் இராஜ்ஜியத்தை நடத்தும் தீய சக்தி திமுகவை விரட்டியடிப்போம்.! சபதம் எடுத்த நயினார் நாகேந்திரன்
நரிகளின் இராஜ்ஜியத்தை நடத்தும் தீய சக்தி திமுகவை விரட்டியடிப்போம்.! சபதம் எடுத்த நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றார். திமுக அரசை வீழ்த்த சபதம் ஏற்று 2026 தேர்தலுக்கு தயாராகுங்கள் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

TN BJP President Nainar Nagendran : தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி மண்டபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழக பா பாஜக மாநில தலைவராகப் பதவியேற்றேன். இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்றத்தில் தமிழரின் அடையாளமான செங்கோலை நிறுவியது, நமது தமிழ் சமூகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஆன்மீக பாரம்பரிய பிணைப்புகளைக் கொண்டாடும் வகையில் "காசி தமிழ் சங்கமம்" என்ற கலாச்சார நிகழ்வை அறிமுகப்படுத்தியது,
BJP leader Nainar Nagendran
அயராது உழைப்பேன் என உளமார உறுதி
உலக அரங்குகளில் நமது தொன்மை வாய்ந்த தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி உரையாற்றுவது என அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு நமது தமிழ் மொழியை நெஞ்சார நேசிக்கும் ஒரு உன்னத தலைவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அன்னார் வகுத்த பாதையில் சென்று பணியாற்றும் வாய்ப்பினை பெற்றதை பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன்.
நமது கட்சிக்காகவும், நமது கட்சியின் உயர்வான கொள்கைகளுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சி குறித்த நமது பாரதப் பிரதமரின் எல்லையில்லா கனவுகளுக்காகவும், நமது கட்சித் தொண்டர்களின் நலனுக்காகவும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அயராது உழைப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன்.
DMK vs BJP
தமிழகத்தை கொடிய கருமேகங்கள் இன்று சூழ்ந்திருக்கிறது
இந்த புனித நாளில் நாமொரு சபதம் ஏற்போம்! மக்கள் விரோத திமுக ஆட்சியினால் தமிழகத்தை கொடிய கருமேகங்கள் இன்று சூழ்ந்திருக்கிறது. நமது தமிழக பெண்களைப் பாதுகாக்கத் தவறிய இந்த கையாலாகாத அரசை, நமது பிள்ளைகளுக்கு நற்கல்வி கிடைத்து அவர்கள் முன்னேறி விடக்கூடாது என துடிக்கும் இந்த கேவல அரசை
, ஊற்றிக்கொடுத்து பல அப்பாவிக் குடும்பங்களுக்கு உலை வைக்கும் இந்த உதவாக்கரை அரசை, ஊழலில் கொழுத்துப் போய் கொள்ளையடிக்கும் இந்த திருட்டு மாடல் அரசை, திக்கெட்டும் புகழ் ஒளி வீசிய நமது தமிழகத்தை இருளின் தள்ளிய இந்த கொடிய திமுக அரசை அதிகாரத்திலிருந்து துரத்தியடிப்போம்!
Tamil Nadu politics
2026-ன் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராவோம்
"மக்கள் பணியே மகேசன் பணி" என்ற தெய்வீகக் குறிக்கோளை உந்துசக்தியாகக் கொண்டு, நரிகளின் இராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கும் தீய சக்தி திமுகவை விரட்டியடிப்போம் என்ற சூளுரையோடு, 2026-ன் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராவோம்! தமிழக மக்களுக்கு விடிவுகாலத்தை பெற்றுத் தந்திட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்திட, அயராது உழைப்போம்! அயராது உழைப்போம்! அயராது உழைப்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்