MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரத்தம் தோய்ந்த கரங்களுடன் திமுக.. விரட்டியடிக்கப்படும் காட்டாட்சி.. நயினார் உறுதி

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் திமுக.. விரட்டியடிக்கப்படும் காட்டாட்சி.. நயினார் உறுதி

மடப்புரம் கோவில் காலாளி அஜித்குமார் பொய் புகாரில் அடித்து கொலை செய்திருப்பதாக சிபிஐ அளித்த அறிக்கையை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுவின் காட்டாட்சி விரட்டி அடிக்கப்படுவது உறுதி என காட்டமாக தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 05 2026, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி
Image Credit : Asianet News

மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதவிவில், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தையே உலுக்கிய சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணம், காவல் மரணம் எனவும், அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஒன்றுமே இல்லாத வழக்கில் அப்பாவி ஒருவரைக் காவலர்கள் அநியாயமாக அடித்துக் கொலை செய்துவிட்டனர் என நீதிபதிகள் காட்டம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடப்பது மனிதநேயமற்ற கொடுங்கோல் ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

23
அடித்தே கொலை செய்யப்பட்ட அப்பாவி
Image Credit : Asianet News

அடித்தே கொலை செய்யப்பட்ட அப்பாவி

பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வரும் பெண்களிடம் தனிப்பட்ட முறையில் துருவித் துருவி விசாரித்து அவர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் திமுகவின் ஏவல்துறை, அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன? புகாரின் பின்னணியையும் உண்மைத் தன்மையையும் முழுதாக ஆராயாமல் கையில் கிடைத்த அப்பாவியைக் கம்பால் அடித்தே கொலை செய்யுமளவிற்குக் காவலர்களின் இதயம் மரத்துப் போய்விட்டதா? மூளை மழுங்கிவிட்டதா? அல்லது மேலிடத்திலிருந்து அத்தனை அழுத்தம் கொடுக்கப்பட்டதா?

Related Articles

Related image1
திமுக ஆட்சியில் கட்டண கொள்ளை.. வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது.. நயினார் சாபம்
Related image2
தமிழ்நாட்டை அண்ணா தான் ஆட்சி செய்கிறார்.. பாஜகவின் ஆணவத்துக்கு தமிழகத்தில் Get Out தான்.. முதல்வர் ஸ்டாலின்
33
விரட்டி அடிக்கப்படும் திமுகவின் காட்டாட்சி
Image Credit : X/@NainarBJP

விரட்டி அடிக்கப்படும் திமுகவின் காட்டாட்சி

சிவகங்கை வரை சென்ற முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது ஏவல்துறையின் மூர்க்கத்தனத்தால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் சொல்லாதது ஏன்? - உள்ளிட்ட பல கேள்விகள் மக்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்திற்குமான விடைகள் வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளில் கிடைக்கும்! ஏழை எளிய மக்களை பலிகொடுக்கும் திமுகவின் காட்டாட்சி விரட்டியடிக்கப்படும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயினார் நாகேந்திரன்
மு. க. ஸ்டாலின்
திமுக
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Recommended image1
லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்.! வெறும் 3 நாள் போதும்.. சொந்த தொழில் தொடங்கி சூப்பர் வாய்ப்பு
Recommended image2
Now Playing
சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
Recommended image3
குட்டி காஷ்மீராய் மாறிய உதகை.. பொதுமக்களை கதறவிடும் உறைபனி.. சிலாகிக்கும் டூரிஸ்ட்.. வைரலாகும் போட்டோ
Related Stories
Recommended image1
திமுக ஆட்சியில் கட்டண கொள்ளை.. வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது.. நயினார் சாபம்
Recommended image2
தமிழ்நாட்டை அண்ணா தான் ஆட்சி செய்கிறார்.. பாஜகவின் ஆணவத்துக்கு தமிழகத்தில் Get Out தான்.. முதல்வர் ஸ்டாலின்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved