MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உயிரே போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்..! ராகுல் சொல்லியும் அடம் பிடிக்கும் MP சசிகாந்த் செந்தில்

உயிரே போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்..! ராகுல் சொல்லியும் அடம் பிடிக்கும் MP சசிகாந்த் செந்தில்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

2 Min read
Author : Velmurugan s
Published : Sep 01 2025, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்திற்கான கல்வி நிதி
Image Credit : Asianet News

தமிழகத்திற்கான கல்வி நிதி

2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் மும்மொழி கொள்கை அடங்கிய புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழகம் ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதன் விளைவாக கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி சார்ந்த பல திட்டங்கள் முடங்கி உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்
Image Credit : Asianet News

4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

இந்நிலையில், தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி நிதியை வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் எம்.பி.சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக எம்.பி.யின் உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.

மருத்துவமனை தரப்பில்

எம்.பி.யின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “சசிகாந்த் செந்திலுக்கு ஏற்கனவே உடலில் சில குறைபாடுகள் உள்ளன. அவரது தொடர் போராட்டத்தால் உடல் நலன் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அவரது போராட்டம் தொடரும் பட்சத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிருக்கே ஆபத்தாக மாறக் கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

Related Articles

Related image1
நான் இருக்கும் வரை கல்விக் கொள்கை வராது! வரியை நிறுத்த ஒரு நொடி போதும்! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
Related image2
அடடே இப்படி ஒரு தொலைநோக்கு பார்வையா! திமுக.வின் மாநில கல்வி கொள்கையை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
34
தலைவர்கள் ஆதரவு
Image Credit : Asianet News

தலைவர்கள் ஆதரவு

தமிழக கல்வி நிதிக்காக போராட்டம் நடத்தி வரும் எம்.பி.யை பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் நாசர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசு, எம்.பி.துரைவைகோ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

44
ராகுல் கோரிக்கை
Image Credit : Asianet News

ராகுல் கோரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சசிகாந்த் செந்திலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உங்களது போராட்டம் மிக மிக முக்கிய பிரச்சினை தொடர்புடையது. உங்களது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள். இருப்பினும் உங்கள் உடல் நலனை கவனத்தில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டதாகவும், ஆனால் எனது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என்று அவர் தீர்க்கமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய காங்கிரஸ்
ராகுல் காந்தி
தமிழ்நாடு அரசு
மு. க. ஸ்டாலின்
கல்வி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magalir Urimai Thogai: ரூ.1000 இனி கிடையாது? விஜய்யின் ரூ.2500 திட்டம் எப்போது அமலாகும்? மகளிர் உரிமைத் தொகை லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image2
நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் பதறிய TTV.தினகரன்.. அமமுக எம்எல்ஏ மிஸ்சிங்.. தவெக வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Recommended image3
Now Playing
புதிய அரசு அமைய தவெகவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு ! கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்கள் கூட்டாக பேட்டி..
Related Stories
Recommended image1
நான் இருக்கும் வரை கல்விக் கொள்கை வராது! வரியை நிறுத்த ஒரு நொடி போதும்! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
Recommended image2
அடடே இப்படி ஒரு தொலைநோக்கு பார்வையா! திமுக.வின் மாநில கல்வி கொள்கையை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved