- Home
- Tamil Nadu News
- இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 34 வயது பிந்து! 2வது க.காதலனும் கழற்றிவிட்டதால் அடுத்து என்ன செய்தார் தெரியுமா?
இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 34 வயது பிந்து! 2வது க.காதலனும் கழற்றிவிட்டதால் அடுத்து என்ன செய்தார் தெரியுமா?
கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலன் கைவிட்டதால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில் கள்ளக்காதலன் தனது குடும்பத்துடன் செல்வதாக கூறியதால், மனமுடைந்த பெண் விஷ மாத்திரை தின்று உயிரை மாய்த்துக் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புண்ணியம் பகுதியை சேர்ந்தவர் பிந்து (34). இவரது கணவர் ஜெயக்குமார். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர் 5ம் வகுப்பு படித்த போது ஜெயக்குமார் இறந்து விட்டார். பின்னர் பிந்து மருதம்பாறையை சேர்ந்த வின் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்து எல்கேஜி படித்தார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிந்து 2வது கணவரையும் பிரிந்து மகன், மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே பிந்துவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். விஜிக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் மகன், மகள் உள்ளனர். இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் விஜியின் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளார். இதையடுத்து விஜி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிந்து, அவருக்கு பிறந்த 5ம் வகுப்பு படிக்கும் மகன், எல்கேஜி படிக்கும் மகள் ஆகியோருடன் கடையாலுமூடு அருகே பிலாங்தோட்டவிளை ஆர்சி சர்ச் சாலையில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார். இதன்பிறகு விஜி பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வாடகை வீட்டில் பிந்துவுடன் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் விஜி வீட்டுக்கு வராததால் அவரது மனைவி அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து விஜியிடம் விசாரணை நடத்த காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது அங்கு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் விஜி தனது மனைவி, பிள்ளைகளிடம் சென்றுவிடுவதாக கூறியுள்ளார். இதனை அறிந்தும் பிந்து விஜியிடம் சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார்.
இதனால் விரக்தியுடன் உச்சிக்கே சென்ற பிந்து தென்னைக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.