MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Monthly Pension Increase: குட்நியூஸ்! தமிழகத்தில் மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?

Monthly Pension Increase: குட்நியூஸ்! தமிழகத்தில் மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?

முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற வழிவகை செய்யப்படும்.

2 Min read
vinoth kumar
Published : Sep 07 2024, 07:05 AM IST| Updated : Sep 07 2024, 07:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
CM Stalin

CM Stalin

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி வைத்து விழாவில் உரையாற்றிய போது தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவ பணியில் கழித்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்வதோடு, கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என கூறினார்.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு! சர்ச்சையால் தூக்கி அடிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்! நடந்தது என்ன?

24
Ex-military man

Ex-military man

மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும். விடுதலை போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000  என்பது 21,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றார். அதேபோல் விடுதலை போராட்ட தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000த்திலிருந்து இனி ரூ.11,500 உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். 

34
Tamilnadu Government

Tamilnadu Government

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு, மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதற்காக, கூடுதல் செலவீனமாக 29.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Tamilnadu Government Buses: அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றம்! புது பிளானோடு களத்தில் இறங்கி அசத்தல்!

44
Increase in monthly pension

Increase in monthly pension

இதேபோன்று சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியத்தை ரூ.10,000யிலிருந்து ரூ.10,500ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் செலவீனமாக 5.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved