மு.க.தமிழரசுக்கு என்ன ஆச்சு! மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மு.க.தமிழரசுக்கு என்ன ஆச்சு! மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசு. இவர் திமுக எந்த பொறுப்பில் இல்லை என்றாலும்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறனக்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!
மு.க.தமிழரசு
இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் மு.க.தமிழரசுக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சிடைந்த குடும்பத்தினர் அவரை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் தனது சகோதரர் உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்த முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மு.க.தமிழரசுக்கு உடல்நிலை எப்படி இருக்கு, எந்த பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை.
இதையும் படிங்க: குரூப் 2 தேர்வர்களுக்கு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
அருள்நிதி தந்தை
தமிழ் திரைப்படத்தில் டிமாண்டி காலனி, வம்சம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராக நடித்துள்ள அருள்நிதியின் தந்தை தான் மு.க.தமிழரசு என்பது குறிப்பிடத்தக்கது.