MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பூந்தமல்லி–போரூர் மெட்ரோ ரயில் எப்போது இயக்கம்? முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!

பூந்தமல்லி–போரூர் மெட்ரோ ரயில் எப்போது இயக்கம்? முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பூந்தமல்லி–போரூர் மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக முக்கிமான செய்தி ஒன்றை கூறியுள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Feb 13 2025, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பூந்தமல்லி–போரூர் மெட்ரோ ரயில் எப்போது இயக்கம்? முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!

பூந்தமல்லி–போரூர் மெட்ரோ ரயில் எப்போது இயக்கம்? முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!

நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு அருமருந்தாக மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளன. சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பூந்தமல்லி–போரூர் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.2 கிமீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையப் பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில்

பின்பு இந்த ஆய்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தலைவர் கலைஞர் முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். 

வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் லிஸ்ட் இதோ!

34
சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ

அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம். 2025ம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்!

44
பூந்தமல்லி–போரூர் மெட்ரோ ரயில்

பூந்தமல்லி–போரூர் மெட்ரோ ரயில்

நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். 

தமிழ்நாடு அமைச்சரவையில் தீடீர் இலாகா மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Kisan Update: விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்? 24-வது தவணை எப்போது? இதோ அப்டேட்
Recommended image2
Government Employees : அரசு ஊழியர்கள் கைல எவ்ளோ காசு எடுத்துட்டு போலாம் தெரியுமா?
Recommended image3
G Square:ஜி ஸ்கொயர் நிறுவனர் அறிவித்த அதிரடி ஆஃபர்.! பரந்தூரில் ஒரு சென்ட் நிலம் இருந்தாலும் நிரூபியுங்கள்.! 50% பங்கு தருகிறேன்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved