MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Mitsubishi Electric ஆலை.. ரூ.2091 கோடி முதலீடு.. 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.. மாஸ் காட்டும் முதல்வர் ஸ்டாலின்

Mitsubishi Electric ஆலை.. ரூ.2091 கோடி முதலீடு.. 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு.. மாஸ் காட்டும் முதல்வர் ஸ்டாலின்

Mitsubishi Electric: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 06 2026, 03:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்
Image Credit : Asianet News

மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 2091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைத்துள்ள, அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

24
மகளிர்க்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு
Image Credit : Asianet News

மகளிர்க்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில். முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. மாநிலத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை மேன்மேலும் மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Related image1
அப்பனுக்கு துரோகம் செய்தவன் எல்லாம் நம்மள விமர்சிக்கிறான்! அன்புமணியை ஒருமையில் பேசி கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!
Related image2
போதை பார்ட்டியில் அதிரடி ரெய்டு.. கொத்து கொத்தாக சிக்கிய நடிகைகள்! சென்னையில் பரபரப்பு.!
34
வீட்டு உபயோகப் பொருட்கள்
Image Credit : Asianet News

வீட்டு உபயோகப் பொருட்கள்

மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன், ஆற்றல் மற்றும் மின்சார அமைப்புகள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் மற்றும் தொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களை தயாரிப்பதில் இணையற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்த உலகளாவிய முன்னணி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், 2091 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 2104 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2023-ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன.

44
குளிர்சாதன இயந்திரங்கள்
Image Credit : Asianet News

குளிர்சாதன இயந்திரங்கள்

அதன் தொடர்ச்சியாக, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வானது, திட்டங்கள் செயல்பாட்டு நிலைக்கு முன்னேற்றம் பெற, அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் Mitsubishi Electric நிறுவனம் அமைத்துள்ள இத்தொழிற்சாலை, இந்தியாவில் அதன் முதலாவது அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. வெளிப்புற அலகுகள், உட்புற அலகுகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் முதலாவது தொழிற்சாலையாகவும் இது இருக்கும். இந்நிறுவனம், இத்திட்டத்தில் இதுவரை 1633 கோடி ரூபாய் முதலீடு மேற்கொண்டுள்ளதுடன், 200-க்கும் மேற்பட்ட மகளிர் உட்பட 629 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அம்பலமான திமுக அரசின் தொழில் முதலீட்டு பொய் மூட்டைகள்.. வறுத்தெடுக்கும் அன்புமணி..
Recommended image2
கணவர் ரொம்ப நல்லவர்! என் சாவுக்கு இவங்க தான் காரணம்! 6 மாத குழந்தையுடன் தாய்! கலங்க வைக்கும் கடைசி நிமிடம்!
Recommended image3
கூட்டணிக்கு திமுக தலைமை: தொடர்வது நல்லதல்ல..! இடியை இறக்கும் காங்கிரஸ்..!
Related Stories
Recommended image1
அப்பனுக்கு துரோகம் செய்தவன் எல்லாம் நம்மள விமர்சிக்கிறான்! அன்புமணியை ஒருமையில் பேசி கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!
Recommended image2
போதை பார்ட்டியில் அதிரடி ரெய்டு.. கொத்து கொத்தாக சிக்கிய நடிகைகள்! சென்னையில் பரபரப்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved