MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாஜகவின் அடிமையாக வாழும் எடப்படி பழனிசாமி அவமானப்படுவது உறுதி – அமைச்சர் ரகுபதி!

பாஜகவின் அடிமையாக வாழும் எடப்படி பழனிசாமி அவமானப்படுவது உறுதி – அமைச்சர் ரகுபதி!

Minister Regupathy Talks about Edappadi Palaniswami slave to the BJP : பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல் என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதி என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

3 Min read
Rsiva kumar
Published : Apr 07 2025, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Edappadi Palaniswami

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி

Minister Regupathy Talks about Edappadi Palaniswami slave to the BJP : தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைக்கு ஒவ்வொரு கட்சியும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் தமிழக திமுக சட்டத்துறை அமைச்சராஅ ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

29
ADMK Edappadi Palanswami

ADMK Edappadi Palanswami

எடப்பாடி பழனிசாமி

அதில், அவர் பாஜகவின் அடிமையாக வாழ்வதே அரசியல் என்று எடப்பாடி பழனிசாமி வாழ்கிறார். அவர் அவமானப்படுவது உறுதி. அவர் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகியை கேட்டால் பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவர் கூட எடப்பாடி பழனிசாமி தான் குறிப்பிடுவான்.

39
Palanaisamy

Palanaisamy

துரோகங்களை செய்து அரசியலில் முன்னேறியவர் பழனிசாமி

துரோகங்களை செய்து அரசியலில் முன்னேறியவர். ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார். ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்; ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பாஜகவின் பாதம் தாங்கியாக மாறி  ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் தான் பழனிசாமி. தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!

49
Minister Regupathy, Minister Of Law Regupathy and Edappadi Palaniswamy

Minister Regupathy, Minister Of Law Regupathy and Edappadi Palaniswamy

எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார்?

சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார்? எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும். உண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்தத் தியாகிகள்!

59
Tamilnadu Politics

Tamilnadu Politics

பாஜகவுடன் கூட்டணி கிடையாது

கடந்த 2 ஆண்டுகளாக ’பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று வீர வசனம் பேசிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி மேலிடத்திற்கு பயந்து தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார். அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான்! அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்!

69
DMK and ADMK, Edappadi Palaniswamy

DMK and ADMK, Edappadi Palaniswamy

பாஜகவுடன் கள்ளக்கூட்டணி

பாஜகவுடன் இதுகாலம் வரையில் இருந்த கள்ளக்கூட்டணி, கரம் பிடிக்கும் கூட்டணியாக மாறப் போவதால், ரத்தத்தின் ரத்தங்களும் மக்களும் நாக்கை பிடுங்கும் வகையில் கேள்வி கேட்பார்கள். தனது டெல்லி எஜமானர்களின் ஏவல் படையான அமலாக்கத்துறை தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய ஒரு முகாந்திரமற்ற சோதனையை வைத்துக் கொண்டு, அபத்தமான கேள்வியோடு தனது கோமாளித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. யார் அந்த சார்? என்ற புரளி நாடகம் அம்பலப்பட்ட பிறகு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று திணறிக் கொண்டிருக்கிறார்.

79
Minister Regupathy, Minister Of Law Regupathy

Minister Regupathy, Minister Of Law Regupathy

அமித்ஷாவை பதுங்கிப் பதுங்கி சென்று சந்தித்த கோழை பழனிசாமி

கள்ளக் கூட்டணியை உறுதி செய்ய டெல்லியில் அமித்ஷாவை பதுங்கிப் பதுங்கி, கார்கள் மாறி மாறி சென்று சந்தித்த கோழை பழனிசாமி, தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றிப் பேசத் திராணியிருக்கிறதா? தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என நீதிமன்றத்திற்கு ஓடிப் போய் தடையாணை வாங்கிய பயந்தாங்கொள்ளி பழனிசாமி பேசுவது அத்தனையும் கேலிக்கூத்துகள்தான்.

89
Minister Regupathy, Minister Of Law Regupathy

Minister Regupathy, Minister Of Law Regupathy

தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் துரோகம்

தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் துரோகம், இந்தியைத் திணித்து துரோகம், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து துரோகம் என பாஜக வரிசையாக துரோகங்களைச் செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது. கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி!

99
Minister Regupathy, Minister Of Law Regupathy

Minister Regupathy, Minister Of Law Regupathy

முதல்வருக்கு ஊடகங்கள் பாராட்டு

இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரை இன்று உலக அளவில் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அதைப் பொறுக்க முடியாமல், தனது பதவி நலனுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ’பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல் என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி டெல்லி எஜமானர்களின் ஆணையின் படி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகமும் மக்களிடம் அம்பலப்பட்டு பழனிசாமி அவமானப்படுவது உறுதி என்று பதிவிட்டுள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
அரசியல்
எடப்பாடி பழனிசாமி
திமுக
எடப்பாடி பழனிசாமி அதிமுக
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved