- Home
- Tamil Nadu News
- துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து! அப்படினா அமைச்சர் பதவிக்கு ஆபத்தா? தீர்ப்பில் கூறுவது என்ன?
துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து! அப்படினா அமைச்சர் பதவிக்கு ஆபத்தா? தீர்ப்பில் கூறுவது என்ன?
1996-2001 திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Accumulation of property accumulation
DuraiMurugan Release Order Canceled: கடந்த 1996 முதல் 2001 திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன். இவர் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002-ல் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், அவரது சகோதரர் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் அனைவரையும் விடுவித்து வேலூர் நீதிமன்றம் கடந்த 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
DuraiMurugan Assets Case
சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு
இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை குறித்து விளக்கம் அளித்து வாதிட்டார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்! செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?
Chennai high Court
லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியிருப்பது தவறானது
அமைச்சர் துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, பி.வில்சன் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களின் சொத்துக்களையும், அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியிருப்பது தவறானது. எனவே இந்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
chennai high court judgement
துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், அவரது சகோதரர் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.