Heat Wave : மீண்டும் கொளுத்தப்போகுது வெயில்... 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் - ஷாக் கொடுத்த வானிலை மையம்
வங்க கடலில் உருவான ரீமல் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வெப்பநிலையை பொறுத்த வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடந்த புயல்
வங்க கடலில் உருவாகியிருந்த 'ரீமல்' புயல் நேற்று (26-05-2024) நள்ளிரவு, வங்க தேச கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது.
tamilnadu rain
மழைக்கான வாய்ப்பு எந்த பகுதி.?
இதனையடுத்து தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மழை தொடர்பாக வானிலை நிலவரம் தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,
27.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழைக்கான வாய்ப்பு
28.05.2024 முதல் 30.05.2024 வரை; தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.05.2024 மற்றும் 01.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
27.05.2024 முதல் 30.05.2024 : அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
27.05.2024; அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
28.05.2024 முதல் 30.05.2024 வரை; அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
27.05.2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28.05.2024: குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.05.2024 மற்றும் 30,05,2024; குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.