தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு.! மெமு சிறப்பு ரயில் இயக்கம்- எங்கிருந்து எங்கே.? வெளியான தகவல்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வரும் பயணிகள் கூட்டத்தால், சென்னைக்கும் மதுரைக்கும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 15, 18, மற்றும் 19 தேதிகளில் இந்த சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படும்.
pongal festivel
பொங்கல் கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகையானது தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொடர் விடுமுறையாக இந்தாண்டு 6 முதல் 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். பேருந்துகள் மூலம் மட்டும் கடந்த 4 நாட்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். இதே போல ஆம்னி பேருந்து மற்றும் ரயில்களின் மூலமாகவும் பல லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
MEMU train service
சிறப்பு ரயில் அறிவிப்பு
இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறுமாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பவதற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இடம் கிடைக்காத நிலை உள்ளது. இதனையடுத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என பொதுமக்கள் காத்துள்ளனர். இவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கும், மதுரையில் இருந்து சென்னை திரும்பவதற்கும் சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
MEMU train
மெமு ரயில் இயக்கம்
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள அறிவிப்பில் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலானது( ரயில் எண் 06164) ஜனவரி 15ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் மதுரையில் இருந்து புறப்படும் எனவும் சென்னை எழும்பூருக்கு அதிகாலை 3:20 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெமு சிறப்பு ரயிலானது மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் வந்தடைகிறது.
MEMU train
எங்கிருந்து எங்கே.?
இதே போல சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு சிறப்புரயிலானது (ரயில் எண் 06061/06062) இயக்கப்படுகிறது இந்த ரயில் ஜனவரி 18ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரையை சென்று சேருகிறது. ஜனவரி 18ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 10:45 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 7:15 மணிக்கு மதுரையை சென்று சேருகிறது.
இதேபோல 19ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னையை மெமு சிறப்பு ரயில் வந்து அடைகிறது. ஜனவரி 19ஆம் தேதி மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் ரயிலானது சென்னை எழும்பூருக்கு இரவு 12 45 மணிக்கு வந்து சேருகிறது