MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Mannargudi MLA Kamaraj: அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

Mannargudi MLA Kamaraj: அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

Mannargudi MLA Kamaraj: மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ், சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், அமமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 12 2026, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் விஜய்க்கு ஆதரவு
Image Credit : Asianet News

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் விஜய்க்கு ஆதரவு

தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்து கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் உரையாற்றினர். அப்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் பேசுகையில்: முதல்வராக பொறுப்பேற்றவுடன் நீங்கள் கையெழுத்திட்ட மூன்று அறிவிப்புகளும் தமிழ்நாட்டுக்கு உதவும் திட்டங்கள். நீங்கள் நல்லாட்சி தர வேண்டும். 5 ஆண்டுகால சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும். 50 ஆண்டுகால ஆட்சிக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் இளைஞர்களும் நாங்களும் உங்களை நம்புகிறோம். உங்கள் அரசு தொடர்வதற்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
Image Credit : Asianet News

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

இந்நிலையில் சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அமமுகவின் ஒன்றை எம்எல்ஏவான காமராஜ் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் .S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.

Related Articles

Related image1
TVK : ஆட்சிக்கு வந்ததும் தவெக-வுக்கு முதல் அடி; திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பங்கேற்க ஐகோர்ட் தடை!
Related image2
TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு விஜய்.! அன்புமணி பாராட்டு!
35
அமமுகவில் இருந்து நீக்கம்
Image Credit : Google

அமமுகவில் இருந்து நீக்கம்

S.காமராஜ் அவர்களின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

45
கொள்கை குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பாடு
Image Credit : Asianet News

கொள்கை குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பாடு

ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

55
குதிரை பேர அரசியல்
Image Credit : Asianet News

குதிரை பேர அரசியல்

இதனையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மன்னார்குடி எம்எல்ஏவான காமராஜ்: சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பேன். சட்டமன்றத்தில் முதல்வரை புகழ்ந்து பேசுவது தவறா? கடந்த 10 ஆண்டுகாலமாக அமமுகவிற்கு உழைத்தேன். அதற்கு கிடைத்த பரிசாக கட்சியிலிருந்து நீக்கத்தை எடுத்துக்கொள்கிறேன். தலைமை முடிவு எடுக்கும்போது கட்டுப்பட்டுத்தான் ஆகணும். ஒன்றும் வருத்தமில்லை என தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த சில நாட்களில் தவெகவுக்கு அமமுக எம்எல்ஏவான காமராஜ் ஆதரவு தெரிவித்துள்ளதாக வீடியோ வைரலானது. தனது கட்சி எம்எல்ஏவை கடத்திவிட்டதாக விஜய் குதிரை பேர அரசியல் நடத்துவதாகவும் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிடிவி தினகரன்
அரசியல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அதிமுகவில் மீண்டும் தொடங்கி அதிகார யுத்தம்..! "அதிமுகவை காப்பாற்ற முக்கிய முடிவு எடுத்துள்ளோம்"
Recommended image2
Now Playing
தமிழக முதல்வர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்தார் !
Recommended image3
Now Playing
TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு..! அன்புமணி பாராட்டு!
Related Stories
Recommended image1
TVK : ஆட்சிக்கு வந்ததும் தவெக-வுக்கு முதல் அடி; திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பங்கேற்க ஐகோர்ட் தடை!
Recommended image2
TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு விஜய்.! அன்புமணி பாராட்டு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved