MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Southern Railway: தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி! ரயில்கள் ரத்து! முழு விவரம் இதோ!

Southern Railway: தென்மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி! ரயில்கள் ரத்து! முழு விவரம் இதோ!

Southern Railway: தென் மாவட்டங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக  ரயில் சேவை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 07 2024, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்புகின்றனர். இதனால், அனைத்து ரயில்களிலும் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரிசர்வேஷன் செய்யப்பட்டு விடுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் எப்போதும் நிரம்பியே காணப்படுகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்புக்காக அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள்  தமிழகம் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 25 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: Petrol Diesel Price: வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்! பெட்ரோல், டீசல் விலை குறைகிறது? எவ்வளவு தெரியுமா?

34

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் தொடங்க உள்ளது. எனவே, இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக நெல்லை - திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயிலை ரத்து செய்ய மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வழக்கமாக காலை 8.15 மணிக்கு திருச்செந்துரில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு நெல்லைக்கு வரும் பயணிகள் ரயில், பணிகள் நடக்க உள்ள யார்டு பகுதியில் நிறுத்தப்படும். இந்த ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவில் திருச்செந்தூருக்கு சென்று செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலாக சென்னைக்கு புறப்படும். 

இதையும் படிங்க: Monthly Pension Increase: குட்நியூஸ்! தமிழகத்தில் மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?

44

தற்போது யார்டு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயிலும் மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு  இரு மார்க்கத்திலும் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில் பிற நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என  தெரிவித்துள்ளனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தென்னக இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved