மகளிர் உரிமை தொகை! சட்டப்பேரவையில் முதல்வர் சொன்ன சூப்பர் அப்டேட்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

Magalir Urimai Thogai
மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதனிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஏராளமான பெண்கள் புதிதாக விண்ணப்பித்து வருகின்றனர்.
Magalir Urimai Thogai scheme
மேலும் விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க, ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! அடுத்து சிக்கிய அமைச்சர்! நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!
CM Stalin
இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி ஈஸ்வரன் எம்.எல்.ஏ குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்த திட்டத்தின்கீழ், ஒரு கோடியே 14 லட்சம் பேர்களுக்கு அது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தகுதிவாய்ந்த எல்லோருக்கும் அது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் இதிலே விடுபட்டிருக்கக்கூடியவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
Magalir Urimai Thogai update
ஏற்கெனவே, இந்த அவையிலும் அது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் கருத்திலே கொண்டு, மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை உடனடியாக நிறைவேற்றுகிற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, அந்த பணியைப் பொறுத்தவரையில், வருகிற ஜூன் மாதம் 4ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் கோரிக்கைகளைக் கேட்கக்கூடிய பணிகளை தொடங்கவிருக்கிறோம்.
magalir urimai thogai thittam
அந்த பணி 9 ஆயிரம் இடங்களில் நடைபெறவிருக்கிறது. அப்படி நடைபெறுகிறபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால் நிச்சயமாக விரைவில் அவர்களுக்கும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.