MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரையில் இருந்து மெமு ரயில்; தென் மாவட்ட மக்களுக்கு விரைவில் குட்நியூஸ்?

மதுரையில் இருந்து மெமு ரயில்; தென் மாவட்ட மக்களுக்கு விரைவில் குட்நியூஸ்?

சென்னையிலிருந்து மதுரைக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட மெமு ரயில் சேவையைத் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்களின் போக்குவரத்து வசதி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Ramya s
Published : Nov 05 2024, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Memu Train Service

Memu Train Service

சென்னையில் இருந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் வெளி மாநிலங்களுக்கும் சென்னையில் இருந்து பல ரயில்கள் இயங்கி வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து எளிதாக இருக்கிறது. 

அதே போல் தென் மாவட்ட மக்களுக்கும் போக்குவரத்தை எளிதாக்க மதுரையை அடிப்படையாக கொண்டு திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி என இயக்கப்பட்டால் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் பேருந்தை விட ரயில் டிக்கெட் குறைவு என்பதால் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Memu Train Service

Memu Train Service

தென் மாவட்டங்களில் நுழைவுவாயிலாக மதுரை இருக்கும் நிலையில் அது காய்கறி உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு முக்கியமான இடமாகவும் உள்ளது. மேலும் முருகனின் அறுபடை வீடுகளில் 4 படை வீடுகள் தென் மாவட்டங்களில் தான் இருக்கின்றன. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தேனி வழியையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

எனவே முருகன், ஐயப்பன சீசன்களில் இப்பகுதியில் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். அதே போல் சிவகாசியை பொறுத்தவரை பட்டாசு, அச்சுத்தொழில் பிரதானமாக இருந்து வருகிறது.

DEMU vs MEMU: DEMU மற்றும் MEMU ரயில்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன? Speed எவ்வளவு?

34
MEMU train

MEMU train

தென்காசியில் மரத்தொழில்களும், சாத்தூர், கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளன. எனவே தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

மதுரை கோட்டத்தில் மெமோ ரயில் சேவையை இயக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து தற்போது சோதனை அடிப்படையில் மதுரையில் மெமு ரயில் இயக்கப்பட்டுள்ளது.

44
MEMU Train Service

MEMU Train Service

மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் எனப்படும் மெமு ரயில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3-ம் தேதி இயக்கப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட, முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் சென்னை மதுரை இடையே இயக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ரயில் சேவையை சென்னையில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வரைக்கும், மதுரையில் இருந்து தேனி, நெல்லை, கன்னியாகுமரி வரை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது சோதனை அடிப்படையில் இயக்கப்படும் இந்த மெமு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved