MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • DEMU vs MEMU: DEMU மற்றும் MEMU ரயில்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன? Speed எவ்வளவு?

DEMU vs MEMU: DEMU மற்றும் MEMU ரயில்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன? Speed எவ்வளவு?

Difference between DEMU and MEMU Train: இந்திய ரயில்வேயைப் பற்றி அறிந்து கொள்ளும்போது பல ஆச்சரியமான விஷயங்கள் தெரிய வருகின்றன. பலரும் DEMU மற்றும் MEMU ரயில்களில் பயணம் செய்திருந்தாலும், அவற்றுக்கு இடையேயான வித்தியாசம் என்னவென்று தெரியாது. இந்த இரண்டு ரயில்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 26 2024, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இந்தியாவில் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகம் பேர் விரும்புகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள் மற்றும் குறைந்த கட்டண ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ், கரிப் ரத், வந்தே பாரத், வந்தே மெட்ரோ, ராஜதானி, சதாப்தி, விஸ்டாடோம், மகாராஜா, MEMU, DEMU என பல ரயில்கள் உள்ளன. எல்லா ரயில்களும் ஒவ்வொரு தனித்துவம் மற்றும் சிறப்புகளைக் கொண்டுள்ளது.

27

இன்று DEMU மற்றும் MEMU ரயில்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை பார்ப்போம். இந்த ரயில்கள் பெங்களூரு, சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கின்றன. நமது மாநிலத்திலும் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

37
DEMU Train

DEMU Train

டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது DEMU ரயிலின் முழு வடிவமாகும். அதாவது டீசல் இன்ஜின் மூலம் இயங்குவது இதன் அர்த்தம். குறுகிய தூர பயணங்களுக்கு DEMU ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் டீசல் எலக்ட்ரிக் DEMU, டீசல் மெக்கானிக்கல் DEMU மற்றும் டீசல் ஹைட்ராலிக் DEMU என மூன்று வகைகள் உள்ளன. மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, ஒவ்வொரு மூன்று பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கோச் இருக்கும்.

47
DEMU Facilities

DEMU Facilities

இந்த ரயில்களில் ஸ்லீப்பர் கோச், ஃபர்ஸ்ட் ஏசி, எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் வசதிகள் உள்ளன. 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் இருந்தாலும் மெதுவாகவே இயக்கப்படுகின்றன. மின்மயமாக்கப்படாத பாதைகளில் இந்த DEMU ரயில்கள் அதிகம் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 23, 1994ம் ஆண்டு ஜலந்தர் மற்றும் ஹோசியார்பூர் இடையே முதல் DEMU ரயில் இயக்கப்பட்டது. கிராமப்புற அல்லது புறநகர் பகுதிகளை இணைக்கின்றன.

57
MEMU Train

MEMU Train

மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது MEMU ரயிலின் முழு வடிவமாகும். மின்சாரத்தை கொண்டு குறைந்த மற்றும் நடுத்தர தூரம் பயணம் செய்யும் ரயிலாகும்.  ஒவ்வொரு 4 பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கார் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு அதிகபட்சம் 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, 200 கி.மீ.க்கும் அதிகமான தூர பயணங்களுக்கு MEMU ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.

67
MEMU Facilities

MEMU Facilities

5 அடி 6 அங்குலம் (1,676 மில்லிமீட்டர்) அகல பாதையில் MEMU ரயில்கள் இயக்கப்படுகின்றன. உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டது, 25 கிலோவாட் ஏசி ஓவர்ஹெட் லைன் மூலம் MEMU ரயில்கள் இயக்கப்படுகின்றன. MEMU ரயில்களில் ஸ்லீப்பர், ஏசி, ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் ஏசி, நாற்காலி என பல வசதிகள் உள்ளன. 1995 ஆம் ஆண்டில் முதல் முறையாக MEMU ரயில்கள் தங்கள் சேவையைத் தொடங்கியது.

77
EMU Train

EMU Train

எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது இதன் முழு வடிவமாகும் EMU. இது MEMU ரயிலைப் போன்றது. நகர்ப்புற பகுதிகளான மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னையில் இந்த ரயில்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மும்பையில் இவை லோக்கல் டிரெயின் என்று அழைக்கப்படுகின்றன. லோக்கல் டிரெயின் மும்பை நகரத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது. மும்பையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல மக்கள் லோக்கல் டிரெயின்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Jigarthanda | ஜிகர்தண்டா பிரியரா நீங்க?! மதுரையின் சொர்க்கம் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!
Recommended image2
Jigarthanda: ஜிகர்தண்டா பிரியரா நீங்க?! மதுரையின் 'சொர்க்கம்' பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!
Recommended image3
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved