சென்னை, திருச்சி, மதுரை; கூட்ட நெரிசலை குறைக்க "முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்" - தென்னக ரயில்வே!
MEMU Express Trains : பண்டிகை காலத்தில் கூட்டநெரிசலை தடுக்க தென்னக ரயில்வே MEMU எனப்படும் முன்பதிவில்லா ரயில்களை இயக்கவுள்ளது.
MEMU Trains
தமிழகத்தில் தீபாவளி திருநாள் மிக நீண்ட வார இறுதி நாளில் அமைந்ததால், தொடர்ச்சியாக விடுமுறைகள் கிடைத்திருக்கிறது. இந்த சூழலில் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அதிக அளவிலான பேருந்துகளை தமிழகம் முழுவதும் இயக்கிய நிலையில், தென்னக ரயில்வேயும் தமிழகம் முழுக்க சிறப்பு ரயில்களை இயக்கி வந்தது. இந்த சூழலில் மெமோ (MEMU) எனப்படும் மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் எக்ஸ்பிரஸ் ரயில்களை தாம்பரத்திலிருந்து திருச்சிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கும் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்து இருக்கிறது.
கனமழையில் நனைய தயாரா? 10 மாவட்டங்கள்; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
Southern Railways
தீபாவளி திருநாள் முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த இரண்டு ரயில்கள் செயல்படும் என்று தென்னக ரயில்வே வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. அதன்படி வண்டி எண் 06007, தாம்பரத்தில் இருந்து நாளை நவம்பர் மூன்றாம் தேதி காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சிக்கு மதியம் 1.40 மணிக்கு சென்றடையும். அதே போல இந்த முன்பதிவு இல்லா ரயிலின், மற்றொரு பயணம் நவம்பர் மூன்றாம் தேதி இரவு தொடங்குகிறது.
Special Trains
வண்டி எண் 06008 என்ற அந்த ரயில், திருச்சியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த இரு வழி பயணத்திலும் இந்த ரயிலில் 12 பெட்டிகள் பொருத்தப்பட்டு இருக்கும் என்றும், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் இந்த வண்டி முன்பதிவு இல்லாத வண்டியாகவும் செயல்படும்.
Tambaram
அதேபோல வண்டி எண் 06009, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (நவம்பர் 3) காலை 10.15 மணிக்கு புறப்படும். இந்த வண்டி மதுரைக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடையும். அதேபோல அதே வண்டி 06100 என்ற எண்ணில் நவம்பர் மூன்றாம் தேதி மாலை மதுரையில் இருந்து சுமார் 7:15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் விடியற்காலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகின்றது. இந்த வண்டியில் 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக செயல்படும். இந்த முறை அதிக அளவில் தீபாவளி திருநாள் விடுமுறை வந்த நிலையில் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் மீண்டும் சென்னை நோக்கி வர உள்ள நிலையில், இந்த இரண்டு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
தொடர்ச்சியாக இது எத்தனை நாளைக்கு இயக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
Broadway Bus Stand Change: இடம் மாறும் பிராட்வே பேருந்து நிலையம்! எந்த இடம் தெரியுமா? வெளியான தகவல்!