மதுரை ஆதீனம் கார் விபத்து! திட்டமிட்ட சதி! சொல்வது யார் தெரியுமா?
சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெறும் சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அவர் காயமின்றி தப்பினார்.

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு
madurai adheenam: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு மதுரை ஆதீனத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.
சென்னை நோக்கி வந்த போது கார் விபத்து
மதுரை ஆதீனத்தின் கார் விபத்து
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், நீதிபதிகள், சிவாச்சாரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை வந்துக்கொண்டிருந்த போது மற்றொரு கார் மோதியது.
தருமபுரம் ஆதீனம்
அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்
இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்த காயமுமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதினம் சென்னை புறப்பட்டார்.
இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் இந்த விபத்து திட்டமிட்ட சதி என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மதுரை ஆதீனத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
திட்டமிட்ட சதி
இதுதொடர்பாக தருமபுரம் ஆதீனம் சமூக வலைதள பக்கத்தில்: மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட சதியாக தெரிகிறது. இறை அருளால் மதுரை ஆதினத்திற்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. கார் மட்டும் சிறிது சேதமடைந்துள்ளது. மதுரை ஆதினத்தை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.