மதுப்பிரியர்களுக்கு ஷாக் தகவல்.! மே 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு காரணமாக மே 11, 2025 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

உச்சத்தை தொடும் மதுபானம் விற்பனை
நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் தங்களை மாற்றிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் மது குடித்தால் ஒதுக்கி வைத்த காலம் மலையேறி மதுகுடிக்காதவர்களை தான் தற்போது ஒதுக்கி வைத்து வருகிறார்கள். மேலும் நள்ளிரவு கிளப்புகளில் பெண்களும் அதிகளவில் மது விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.
ஒரு பக்கம் மது விலக்கு கொண்டுவரவேண்டும் என குரல் எழுந்துள்ள நிலையில், மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் மூலம் சுமார் 100 முதல் 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு குறிப்பிட்ட 9 நாட்கள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை அளிக்கப்பட்டும். மேலும் கோயில் திருவிழாக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இடங்கள், தேர்தல் நேரங்கள் போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் அந்த வகையில் வருகிற மே 11ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி கடைகளை திறந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் கூறுகையில், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11.05.2025 (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் (FL1. FL2. FL3. FL3A. FL3AA, மற்றும் FL11) மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிம நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்,
அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.