போக்குவரத்து ஊழியர்களின் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு.. வெளியான ஷாக் தகவல்
தமிழகத்தில் அரசு பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளன, நிதி நெருக்கடி காரணமாக புதிய பேருந்துகள் வாங்க முடியவில்லை. மேலும், ஊழியர்களுக்கான கடன்களும் நிறுத்தப்பட்டுள்ளன, இது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tamilnadu bus
தமிழகத்தில் போக்குவரத்து துறை சேவை
தமிழகத்தில் போக்குவரத்து துறையானது குக்கிராமங்களுக்கு கூட பேருந்துகளை இயக்கி வருகிறது. ஏழை, எளிய மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து தனியார் பேருந்துகளிலோ, கார்களிலோ பயணிக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டே தமிழக அரசு சார்பாக பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வகையில் மகளிர்களுக்கு விடியல் திட்டத்தின் கீழ் இலவச பயணம்,
முதியோர்களுக்கு இலவச பாஸ், மாணவர்களுக்கு இலவச பயணம் என திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும் வருவாய் என்பது குறைவாகவே உள்ளது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னர் கிடைக்க வேண்டிய சலுகைக்கள் கூட கிடைக்காத நிலை உள்ளது.
Government bus
போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை
இதனால் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசாங்கத்தின் சார்பாக கொஞ்சம், கொஞ்சமாக பணிக்கொடையை வழங்கி வரப்படுகிறது. இது மட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 25 ஆயிரம் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இது மட்டுமில்லாமல் தனியார்மய நடவடிக்கையை கைவிட்டு, அனைத்து பிரிவிலும் வாரிசு வேலை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் பேருந்துகளை சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறத்தப்படுகிறது.
cng Government Bus
பழுதடைந்த தமிழக அரசு பேருந்துகள்
அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு தற்போது மோசமான நிலையில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வருகிறது. மேலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் பழுதான பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லாத காரணத்தால் சுமார் 25% பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. எனவே தமிழகத்தில் 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். என கோரிக்கை எழுந்துள்ளது.
government bus
இத்தனை கோடி கடன் சுமையா.?
ஆனால் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி கடன் சுமையானது உள்ளது. இதனால் புதிய பேருந்துகளை வாங்க முடியாத நிலை நீடித்து வருகிறது. பல இடங்களில் பேருந்துகள் பாதிப்படைந்து நடு ரோட்டில் நிற்கும் நிலை உள்ளது. இதனால் போக்குரவத்து ஊழியர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்தநிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி, ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனானது நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தின் செயலாளர் உமாசந்திரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
Government Bus
கடனுதவி நிறுத்தம்
போக்குவரத்து கழகங்கள் உறுப்பினர்கள் வாங்கிய கடனுக்கான தொகையை ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து தவணையாக பிடித்தம் செய்த பணத்தை அரசு போக்குவரத்து கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்திற்கு வழங்கவில்லை. இதனால் இந்த சங்கத்திற்கு 22 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை உள்ளது. இந்த நிலையில் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் மூலம் புதிதாக கடன் வழங்க முடியாத நிலை உள்ளது.
சங்கத்தில் கணக்கை முடித்தவர்களுக்கும் செட்டில்மெண்ட் செய்யமுடியவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியிலும் கடன் பெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு தயாராகும் தொழிலாளர்கள்
இந்தநிலையில் பிடித்தம் செய்த பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிடித்தம் செய்த பணம் மட்டுமே கடனாக வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது கடன் நிறுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.