School Student: பள்ளி மாணவர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! மாதந்தோறும் ரூ.1500!
School Student: தமிழகத்தில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றால் மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
DMK Government
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு ரூ.1500 மாதந்தோறும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
School Student
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2022-ம் ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
School Student Incentives
இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
Director of Examinations
பூர்த்தி செய்த படிவங்களை செப்டம்பர் 5 முதல் 19-ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.