தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் டாப் 5 ரயில்கள்; அட! இந்த எக்ஸ்பிரஸும் இருக்கா?
தமிழ்நாட்டில் அதிவேகமாக இயங்கி பயண நேரத்தை மிச்சப்படுத்தும் ரயில்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Fastest Trains in Tamilnadu
இந்தியாவில் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அதிலும் சாதாரண ரயில்களை விட அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு எப்போதும் மசுவு அதிகம். அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் ரயில்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக காண்போம்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் ரயில்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். தமிழ்நாட்டில் சென்னை-மைசூரு, சென்னை-திருநெல்வேலி, சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 110 முதல் 120 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
மற்ற ரயில்கள் சென்னைமதுரை இடையேயான 462 கிமீ தூரத்தை கடக்க 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும் நிலையில், வந்தே பாரத் 5 மணி நேரம் 38 நிமிடங்களில் கடந்து விடுகிறது. இதேபோல் கோவை, பெங்களூரு வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்களே வேகத்தில் முதன்மையாக உள்ளன.
vande bharat train speed
தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
இந்த பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து இருப்பது தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் இந்த ரயில் 6 மணி 15 நிமிடங்களில் 462 கிமீ தூரத்தை கடந்து விடுகிறது. வந்தே பாரத் போன்று முற்றிலும் ஏசி வசதி கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.
வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
1977ம் ஆண்டு முதல் சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12635) அதிவேகமாக செல்லும் ரயில்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் 7 மணி நேரம் 15 நிமிடங்களில் பயண தூரத்தை கடந்து விடுகிறது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்னையில் இருந்து மதுரை சென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Fastest Trains in india
கொல்லம் எக்ஸ்பிரஸ்
சென்னையில் இருந்து மதுரை, தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16101) இந்த பட்டியலில் இணைந்து ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ரயில் சூப்பட் பாஸ்ட் ஆக இல்லாமல் வெறும் எக்ஸ்பிரஸ் ஆக இருந்தாலும் சென்னையில் இருந்து மதுரைக்கு 7 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்து விடுகிறது. இந்த ரயில் மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது.
Longest trains in india
பாண்டியன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் அதிவிரைவு ரயில் (வ.எண்:16327)சென்னை-மதுரை இடையேயான தொலைவை 7 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து விடுகிறது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸுக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
அட! ரயிலில் Unreserved டிக்கெட்டும் கேன்சல் பண்ணலாமா? எப்படி தெரியுமா?