MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கொடுங்க..! முதலமைச்சர் ஸ்டாலின் கைக்கு சென்ற முக்கிய கடிதம்!

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கொடுங்க..! முதலமைச்சர் ஸ்டாலின் கைக்கு சென்ற முக்கிய கடிதம்!

தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. பயண சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ஆம் தேதியையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 15 2025, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தீபாவளி பண்டிகை
Image Credit : our own

தீபாவளி பண்டிகை

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்தால் ஒரே ஆட்டம் பட்டாம் தான். இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தலைமைச் செயலகச் சங்கம்
Image Credit : Google

தலைமைச் செயலகச் சங்கம்

இந்நிலையில் பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலகச் சங்கம் வெளியிட்டு அறிக்கையில்: தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பெரும்பான்மையானோர் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தீபாவளி திங்கட்கிழமை வருவதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பணியாளர்கள் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புவதில் மிகுந்த சிரமம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.

36
முதல்வருக்கு கோரிக்கை
Image Credit : Asianet News

முதல்வருக்கு கோரிக்கை

எனவே, தீபாவளியை குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் 21ம் தேதி ஒருநாள் மட்டும் ஈடுசெய்யும் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

46
பட்டதாரி ஆசிரியர் சங்கம்
Image Credit : our own

பட்டதாரி ஆசிரியர் சங்கம்

அதேபோல், தீபாவளி முடிந்து வருகிற 21ம் தேதி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலங்கங்களுக்கு பொது விடுமுறையாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து இந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாளில், பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் செல்வார்கள்.

56
தமிழ்நாடு அரசு
Image Credit : our own

தமிழ்நாடு அரசு

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்குச் சென்று வருவார்கள். பொதுப் போக்குவரத்துக்கும் கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும். எனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

66
4 நாட்கள் தொடர் விடுமுறை
Image Credit : our own

4 நாட்கள் தொடர் விடுமுறை

கடந்த சில ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆகையால் இந்த முறையும் விடுமுறை அளிக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் ஓரிரு நாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளதால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி விடுமுறை
பள்ளி மாணவர்
ஆசிரியர்
அரசு ஊழியர்கள்
மு. க. ஸ்டாலின்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
Recommended image2
Now Playing
தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
Recommended image3
Now Playing
வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
Related Stories
Recommended image1
இது தொடக்கம் தான்.. இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! வெதர்மேன் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!
Recommended image2
10-ம் வகுப்பு மாணவன் யுவன் செய்த வேலையை பார்த்தீங்களா! நேரில் பார்த்த பெற்றோர் கதறல்! நடுங்கிய மதுரை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved