- Home
- இந்தியா
- இது தொடக்கம் தான்.. இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! வெதர்மேன் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!
இது தொடக்கம் தான்.. இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! வெதர்மேன் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!
Tamilnadu Weatherman: தெற்கு பருவமழை நிறைவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. பல மாவட்டங்களில் ஏற்கனவே கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை நிறைவு அடைந்ததை அடுத்து தமிழகதத்தில் அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாகவே விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
கனமழை பெய்ய வாய்ப்பு
இந்நிலையில் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுததிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இரவு முதல் காலை வரை மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சென்னை நகரத்தை நோக்கி ஏராளமான மேகங்கள் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இரவு முதல் காலை வரை மழையின் உச்ச நேரம். நாளை பருவமழை தொடங்க உள்ளது. ராமநாதபுரம் முதல் சென்னை வரை தமிழ்நாட்டின் முழு கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். இது ஒரு தொடக்கம் மட்டுமே, போக போக இந்த மாதம் லா சக்கரம் லாம் பக்கலாம் என தெரிவித்துள்ளார்.