47 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவைக்கு புயல்! ஊட்டியில் நிலச்சரிவா? கோவை வெதர்மேன் எச்சரிக்கை!!
Cyclone to Coimbatore: 1977-க்கு பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
Cyclone Fengal moves to Coimbatore
கோயம்புத்தூர் வெதர்மேன்:
1977-க்கு பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார். ஃபெங்கல் புயல், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா சென்று அரபிக்கடல் செல்லும் எனவும் இதனால் ஊட்டியில் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Coimbatore weatherman
கோவைக்கு அலர்ட்:
செய்தியாளர்களிடம் பேசயி சந்தோஷ் கிருஷ்ணன், "1977ஆம் ஆண்டுக்குப் பிறகு கொங்கு மண்டலம் வழியாக இந்தப் புயல் சின்னம் பயணிக்கப் போகிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம்" என்றார்.
குறிப்பாக, "கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 15 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை மழையை பெய்யக்கூடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Santhosh Krishnan Predicted rain to Coimbatore
நீலகிரிக்கு எச்சரிக்கை: பொதுவாக புயல்கள் கொங்கு பகுதி வழியாக பயணிக்காது. இது மிக அரிதான நிகழ்வு. இதனால் ஊட்டியில் அதி கனமழை பெய்யக்கூடும். 30-40 செ.மீ. வரை கூட மழை பெய்யலாம். வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. டிசம்பர் 1 முதல் 3 வரை ஊட்டிக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது எனவும் கோவை வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
கோவையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளது. ஆனால், சென்னையைப் போல பெரிய வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.