- Home
- Tamil Nadu News
- கும்பமேளா புகழ் மோனாலிசா கணவர் மீது போக்சோ வழக்கு.. விரைவில் கைதாகிறார்? நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
கும்பமேளா புகழ் மோனாலிசா கணவர் மீது போக்சோ வழக்கு.. விரைவில் கைதாகிறார்? நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
சோஷியல் மீடியாவில் பிரபலமான பழங்குடியின பெண் மோனலிசா, சமீபத்தில் காதலரை மணந்தார். இந்நிலையில், திருமணத்தின் போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆனது தெரியவந்ததை அடுத்து போக்சோவில் கைது.

உலக புகழ் பெற்ற மஹா கும்பமேளா திருவிழாவில் பாசி மணி விற்றுக்கொண்டிருந்த மோனலிசா. பழங்குடியினத்தை சேர்ந்த இவர் தனது இயல்பான அழகால் சோஷியல் மீடியாவில் ஒரே இரவில் மிகவும் பிரபலமானார். பின்னர் விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த மாதம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்புக் வந்த இவர் அங்குள்ள கோவிலில் காதலன் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் ஒரு முஸ்லீம் என்பதால், இது லவ் ஜிகாத் என பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு இது லவ் ஜிகாத் இல்லை, தனது விருப்பப்படியே திருமணம் நடைபெற்றது என மோனலிசா விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கணவர் பர்மான் மீது போக்சோ (POCSO) சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணமும் தெரியவந்துள்ளது. தேசிய பழங்குடியினர் ஆணையம் (NCST) இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியது. அதில், மோனாலிசாவின் சொந்த ஊரான மத்திய பிரதேசத்தின் மகேஷ்வர் அரசு மருத்துவமனை ஆவணங்களை ஆய்வு செய்யப்பட்டது. அதில் மோனாலிசா 2009ம் ஆண்டு டிசம்பர் 30,ம் தேதியன்று பிறந்தவர் என்பது உறுதியானது.
அதன்படி, கடந்த மார்ச் 11 2026ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற திருமணத்தின் போது அவருக்கு 16 வயது மற்றும் 2 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. திருமணத்திற்காக வயது சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்ததாக மோனாலிசாவின் கணவர் பர்மான் கான் மீது மத்திய பிரேத போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மைனர் பெண்ணுடன் திருமணம் செய்தது, பட்டியல் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act), கடத்தல் மற்றும் ஆவண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மோனாலிசா தம்பதி கேரளாவில் கொச்சியில் வசித்து வருவதால் கைது நடவடிக்கை தொடர்பாக கேரளா போலீசாருடன் மத்திய பிரதேச போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

