MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 4000 ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை.! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

4000 ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை.! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

அரசு கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களில் காலிப்பணியிடங்கள் இருப்பது உண்மை என்றாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 08 2025, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கல்லூரிகளில் ஆசிரியர்கள்
Image Credit : GOOGLE

கல்லூரிகளில் ஆசிரியர்கள்

கல்வி தான் மாணவர்களின் நல்வழிப்படுத்தும் ஆயுதமாக உள்ளது. அந்த வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு உதவிடும் வகையில் கல்வி உதவி தொகை, இலவச சைக்கிள், பேருந்து பயண அட்டை, புத்தகப்பை என திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதே போல ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இதனிடையே உயர்கல்வியான கல்லூரியில் ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவலுக்கு பதிலளித்துள்ளது தமிழக அரசு , இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பேராசிரியர்கள் நியமனம்
Image Credit : our own

பேராசிரியர்கள் நியமனம்

இந்த கல்வியாண்டில் மட்டும் முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கல்லூரிகளே இல்லாத பகுதிகளில் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்கள் குறித்தும் நிரப்பபட்ட முதல்வர்கள் குறித்தும் முற்றிலும் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,500 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என செய்தி வரப்பெற்றுள்ளது. 

ஆனால், உண்மையில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர். 9,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளதும் தவறானதாகும். காலிப்பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

35
4000 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப நடவடிக்கை
Image Credit : unsplash

4000 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப நடவடிக்கை

2015-ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாததால் இந்த காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சரிசெய்ய இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 4,000 ஆசிரியர் பணியிடங்களை அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட ஆணை வெளியிடப்பட்டது. பல்வேறு நிலையில் இதன்மீது 54 வழக்குகள் தொடரப்பட்டதால் நாளதுவரை மேற்படி பணியிடங்கள் நிரப்பிட காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. வழக்குகளை விரைவில் முடித்து மேற்படி காலிப்பணியிடங்களை நிரப்பிட உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு வழக்குகளால் நிரந்தர உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய காலதாமதம் ஆகும் நிலையிலும், மாணவர்களின் கல்வி நலன் கருதி கௌரவ விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்டு, கல்வி பணியாற்றி வருகின்றனர். மேலும், தற்போது சுமார் 800 பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு உயர்கல்விச் சேவை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் பாதிக்கப்படவில்லை.

45
கல்லூரி முதல்வர்கள் காலிப்பணியிடம்
Image Credit : GOOGLE

கல்லூரி முதல்வர்கள் காலிப்பணியிடம்

உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் 58 நிலை-| அரசு கல்லூரிகளில் 46 நிரந்தர முதல்வர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் காலியாக உள்ள 12 முதல்வர் பணியிடங்களில், ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட பட்டியல் (approved Panel) மற்றும் அடுத்து தெரிவு செய்யப்பட உள்ள பட்டியலிலிருந்து முதல்வர்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 1998-ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களின் பணிமூப்புப் பட்டியல் 2023-இல் வெளியிடப்பட்டது. அப்பணிமூப்புப் பட்டியலை ஏற்றுக்கொள்ளாமல் ஆசிரியர்கள் வழக்கு (WP எண் 20170/2023) தொடுத்து தடையாணை பெற்றுள்ளனர். இதன் காரணமாக கல்லூரி முதல்வர்கள் பதவி உயர்வு வழங்குவதில் அரசுக்கு தாமதமாகி உள்ளது இவ்வழக்கில் எதிர்உறுதி ஆவணம் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

55
விரைவில் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம்
Image Credit : our own

விரைவில் கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம்

இதன் மீதான இறுதி ஆணை இதுவரை நீதிமன்றத்தால் வெளியிடவில்லை. வழக்கினை விரைந்து முடித்திட சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு முடிவுக்கு வந்தவுடன் காலியாக உள்ள கல்லூரிகளில் முதல்வர்கள் பணியமர்த்தப்படுவார்கள். எனினும் கல்லூரியின் நிர்வாக நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் பணியிடம் காலியாக உள்ள கல்லூரிகளில் கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் முதல்வர்களாக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கல்லூரி
கல்வி
ஆசிரியர்
தமிழ்நாடு அரசு
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பறவை காய்ச்சல் அபாயம்: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் கூறும் முக்கிய வழிகாட்டுதல்கள்!
Recommended image2
TASMAC: டாஸ்மாக் கடைகளுக்கு ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு! தமிழக அரசுக்கு புதிய சிக்கலா? இனி புதிதாக மதுக்கடைகள் திறக்க முடியாதா?
Recommended image3
அமைச்சர் ராஜ்மோகன் கட்டியிருந்த வாட்ச் விலை ரூ.45 லட்சமா? அவரே கொடுத்த விளக்கம் என்ன?
Related Stories
Recommended image1
மாணவர்கள் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட அரசு.! கல்லூரியில் கூடுதலாக இடங்கள் அதிகரிப்பு
Recommended image2
புதிய தொழில் வாய்ப்புகளின் மையமாக மாறும் சென்னை! ஆரம்ப சம்பளமே ரூ.30000
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved